பல்லவி காலையில் துளசி மாடத்தை சுற்றி கொண்டிருந்தாள் தாத்தா வழக்கம் போல செய்தித்தாள் படித்து கொண்டிருந்தாள்.
பல்லவி :தாத்தா இந்தாங்க காபி
தாத்தா: குடும்மா. ஆமா என்னோட லவ்வர் எங்கம்மா.
நான் இங்கே இருக்கிறேன் டார்லிங் என்று சொல்லிக்கொண்டே வந்தாள் காயத்ரி.
அப்போது பல்லவி இந்தா காபி என்று கொடுத்தாள்.
காயத்ரி :ஏண்டி நல்ல விஷயம் சொல்றப்போ விஷம் கொடுக்குற.
கொஞ்ச நேரம் கழித்து தான் கொடுத்த காபியை சொல்கிறாள் என்று உணர்ந்த பல்லவி அவளை அடிக்க துரத்தினாள்
காயத்ரி :நீ என்ன அடிச்சு எனக்கு எதாவது ஆச்சுன்னா மாப்பிள்ளை என்னை வேண்டான்னு சொல்லிட போறேன்.
பல்லவி :என்னது மாப்பிள்ளையா(என்று உற்சாகத்தில் குதித்தாள் )
தாத்தா :ரொம்ப சந்தோசம்மா. நல்லா இரு. அப்புறம் உன்ன பாக்க வர்ற பையன்கிட்ட சொல்லு நீ என்னோட ஆளுன்னு.
காயத்ரி: சொல்லிட்டா போச்சு டார்லிங். அவன் இனிதா எனக்கு புருஷன் ஆக போறான் ஆனா நீ என்னோட லவ்வர். எனக்கு நீதா எப்போவும் முதல் சரியா டார்லிங்.
தாத்தா :சரி பையன் என்ன செய்றான்.
காயத்ரி :யாருக்கு தெரியும் சாயங்காலம் பார்த்தாதான் தெரியும்.
டார்லிங் நீயும் பல்லவியும் சரி சொன்னாதான் கல்யாணத்துக்கு ஒதுக்குவேன்.பல்லவி ஏதோ சொல்ல வர அவளை தடுத்த நம்பி தாத்தா. நாங்க கண்டிப்பா வருவோம்.
பல்லவி : நீங்க romance பண்ணுங்க நான் போய் ஸ்கூலுக்கு ரெடி ஆகுறேன்.
காயத்ரி :சீக்ரம்
15 நிமிடங்களுக்கு பிறகு
பல்லவி :சரி வா போலாம்.
காயத்ரி : நா வண்டியை எடுக்கிறேன் சரியா நீ அம்மா அப்பாவை கும்பிட்டுவிட்டு வா.
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்