ஆட்டோவிலிருந்து பல்லவி இறங்கினாள் ஆட்டோக்காரருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவளுக்கு இல்லை ஆட்டோகாரர் அழைப்பதை கூட கேட்கவில்லை ஆட்டோக்காரருக்கு கார்த்திக்தான் பணம் அளித்தான்.
வீட்டிற்குள் வந்ததும் பல்லவியிடம் பேச வந்தவனை தன்னுடைய பார்வையாலே தள்ளி நிறுத்தினாள்
கார்த்திக் :உன்கிட்ட பேசணும் சொன்ன இல்லை
பல்லவி :லீவ் மீ அலோன் கார்த்திக்
பல்லவி சற்று சத்தமாகவே அழுதாள் கார்த்திக் அந்த இடத்தைவிட்டு செல்லாமல் நிற்கவே அவனை பார்த்தாள்
பல்லவி :கார்த்திக் எதுக்கு நிக்கிறிங்க ஏன் செத்துப்போய்டுவேன்னு பயமா
கார்த்திக் :பல்லவி ஏன் இப்படி எல்லாம் பேசுற
பல்லவி :பின்ன எப்படி பேசணும் இனி நான் செத்தா என்ன உயிரோட இருந்தா என்ன உங்களுக்கு. விவாகரத்துக்கு அப்புறம்.நீங்க யாரோ நான் யாரோ அதனால நீங்க என்ன நினைச்சி கவலை படாதீங்க. அட நான் ஒருத்தி என்ன நினைச்சி நீங்க ஏன் கவலை பட போறீங்க எனக்கு எதாவது நடந்தா நீங்க கவலை பட மாட்டீங்க உங்களை யாராவது கேள்வி கேட்பாங்களோனு தான் நினைப்பிங்க அதான் உண்மை
கார்த்திக் :இப்படி எல்லாம் பேசாத என்னோட மனசுக்கு கஷ்டமா இருக்கு
பல்லவி :உங்களுக்கு மனசே இல்லை அதுக்கு எங்க இருந்து வலிக்கப்போகுது மிஸ்டர் கார்த்திக் நம்ம விவாகரத்து பத்தி நீங்க பேசுறதுக்கு முன்னாடி நம்ம விவாகத்தை பத்தி நான் பேசணும்
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்