பல்லவியை பார்த்த கார்த்திக் அவள் அருகில் வேகமாக வந்தான் பல்லவி கண்ணீருடன் அவனை பார்த்தவாறே நின்றிருந்தாள்
பல்லவி :கார்த்திக் என்கிட்ட வராதீங்க நான் உங்களை எந்த அளவுக்கு நம்புனேன் ஆனா நீங்க
கார்த்திக் :நான் என்ன பண்ணேன்
பல்லவி :நீங்க கெட்டவர் கார்த்திக்
கார்த்திக் பல்லவியின் தோழ்களை பிடித்து உலுக்க ஆரம்பித்தான்
கார்த்திக் :பல்லவி பல்லவி
விடுங்க கார்த்திக் என்று கத்திகொண்டே உறக்கத்தில் எழுந்தாள் பல்லவி அருகில் கார்த்திக் அமர்ந்திருந்தான்
பல்லவி (m.v): அப்போ கனவா இவர் இங்கதான் இருக்காரு அந்த பொண்ணு யாரு கனவுல இன்னொரு பொண்ணோடயே பாக்க முடியலையே நிஜத்துல அப்படி நடந்திருந்தா
அவளது எண்ண ஓட்டத்தை கார்த்திக் குரல் கலைத்தது
கார்த்திக் :என்ன ஆச்சு கெட்ட கனவா
பல்லவி :ஆமா
கார்த்திக் :கனவில நான் வந்தேனா நான் உன்ன என்ன பண்ணேன் எதுக்கு கிட்ட வராதிங்கன்னு சொன்ன
பல்லவி :எனக்கு நியாபகம் இல்லை
கார்த்திக் அடுத்து ஏதோ சொல்ல வர பாட்டியின் சந்தோசமான குரல் கேட்டது
பாட்டி :அப்டியா எனக்கு ரொம்ப சந்தோசம்மா நான் இப்போவே வீட்டுக்கு வறேன்.
போனை அணைத்தவார் அம்மாடி பல்லவி நம்ம காயத்ரி அம்மா ஆக போறாளாம் இப்போதான் போன் பண்ணி சொன்னா
பல்லவி :அப்டியா ரொம்ப சந்தோசம் பாட்டி
பாட்டி :நானும் கொள்ளுபாட்டி ஆகப்போறேன்
பல்லவி :நாம இப்போவே போய் காயத்ரியை பாத்துட்டு வரலாம்
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்