கார்த்திக்கும் பல்லவியும் ஒரு வழியாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
கார்த்திக் பல்லவியின் கைகளை ஆதரவாக பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்து சென்றான்.
மருத்துவராக காத்திருக்கும் பொழுது செவிலி மருத்துவர் அழைப்பதாக கூறினார்.கார்த்திக் :மெதுவா என்னோட கையை பிடிச்சிக்கிட்டு வாங்க பல்லவி
பல்லவி :ம்ம்ம்
கார்த்திக்கும் பல்லவியும் மருத்துவரின் அறைக்குள் நுழைந்தனர். கார்த்திக்கும் மருத்துவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர். பல்லவி இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
ஜான்சி (doctor):ஹே !நீ கார்த்திக் தான
ஜான்சி
கார்த்திக் :நீ ஜானு தானே
பல்லவி (M. V):என்னது ஜானுவா ஒரு வேளை 96 மாதிரி இவங்களுக்கு 2006னு கதை இருக்குமோ? இருக்காது இருக்கக்கூடாது ஒரு வேளை இருந்தாலும் இப்போ அவரோட ஜானு நான்தான்.
கார்த்திக் :பல்லவி என்ன ஆச்சு என்ன யோசிக்கிற
பல்லவி :ஒண்ணும் இல்லை
ஜான்சி :இவங்க யாரு
கார்த்திக் :இவ என்னோட மனைவி பல்லவி
ஜான்சி :ஹலோ பல்லவி நான் கார்த்திக்கோட friend
பல்லவி :ஓ ஹலோ
ஜான்சி :உட்காருங்க. என்ன ஆச்சு
பல்லவி :இல்ல காலில சின்ன அடி
ஜான்சி :டேய் என்னடா உனக்கு பெரிய அடி பட்டா கூட கண்டுக்க மாட்ட ஆனா பொண்டாட்டிக்கு சின்ன அடி அப்டினா கூட hospitalku கூட்டிட்டு வர்ற. அவ்ளோ லவ்
பல்லவி(M.V) :என்ன டேய் எல்லாம் சொல்றா. தப்பா நினைக்காத பல்லவி அவங்க friendsதான். நட்பை சந்தேகப்படறது கன்னிபொண்ணோட கற்பை சந்தேக படற மாதிரி
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்