hello friends Innaiku story update panrenu Sonna late aiduchu aanalum panren because muthal naale poi solla Virumbala 🤗🤗🤗🤗.
storyku pola
இதோட திருமணம் முடிஞ்சி ஒரு மாசம் ஆயிடிச்சு.
விஷ்ணுவும் காயத்ரியும்கார்த்திக் வீட்டுக்கிட்ட ஒரு வீடு வாங்கி அங்க போய்ட்டாங்க (சண்டை எல்லாம் இல்ல சும்மா கார்த்திக் வீட்டுல ரெண்டு பெட் ரூம்தான் சோ அவங்க பக்கத்து தெருவுல இருகாங்க சரி கதைக்கு வருவோம் )
பல்லவி வழக்கம் போல துளசி மாடத்தை சுற்றி கொண்டிருந்தாள்.
கார்த்திக் பல்லவியை பார்த்துக்கொண்டிருந்தான் பல்லவி துளசி மாடத்தை சுற்றி முடித்தவுடன் திரும்பி கொண்டாளன்.பாட்டி :அம்மாடி பல்லவி
பல்லவி :சொல்லுங்க பாட்டி
பாட்டி :நீ சந்தோசமா இருக்கியா மா.
பல்லவி :ரொம்ப சந்தோசமா இருக்கேன் பாட்டி ஏன் அப்படி கேக்குறீங்க
பாட்டி :பொய் சொல்ற நானும் உன்னோட வயசை தாண்டி வந்தவதானம்மா. உனக்கும் கார்த்திக்கும் கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகுது இன்னும் ஒரு இடத்துக்கு கூட ஒண்ணா வெளிய போகல.
பல்லவி :எனக்கும் அவருக்கும் விடுமுறை கிடைக்க மாட்டேங்குது.
பாட்டி :அப்டியா சரி இணைக்கு உனக்கும் லீவ் அவனுக்கும் லீவ் ரெண்டுபேரும் வெளிய பொய்ட்டு வாங்க (என்றார் பல்லவியின் முகத்தை உற்று நோக்கியபடி )
பல்லவி :சரி பாட்டி (சொல்லிவைப்போம் கார்த்திக் என்ன பண்ணிடுவாரு சும்மா சொல்லி வைப்போம் முருகா காப்பாத்து )
bedroom
பல்லவி :என்னங்க
கார்த்திக் :சொல்லுங்க பல்லவி
பல்லவி :இல்ல நம்ம மேல சந்தேகம் வருது எங்கயாவது வெளிய போயிட்டு வர சொல்ராங்க
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்