சேர்ந்தே சொர்க்கம் வரை -15

5.6K 175 20
                                    

அங்கே சென்ற இருவரும் கார்த்திக்கை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் காரணம் அங்கே கார்த்திக் சிரித்து கொண்டிருந்தான்.

கார்த்திக் :என்ன அதுக்குள்ள நியூஸ் வந்துடுச்சா

விஷ்ணு :என்னடா உனக்கு அடி பட் ருக்குன்னு சொன்னாங்க நீ சிரிச்சிட்டு உக்காந்திருக்குக்க

கார்த்திக் :அவ்ளோ பெரிய அடி எல்லாம் இல்ல சும்மா சின்னதா ஒரு புல்லட் கையில உரசிடுச்சி நான் வீட்டுக்கு போறேன்னு தா சொன்னேன் இவனுங்கதான் ஹாஸ்பிடல்ல சேத்துட்டானுங்க

விஷ்ணு :சரி சிஸ்டர்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல உனக்கு அடி பட்டிடுச்சினு தெரிஞ்ச உடனே எதை பத்தியும் யோசிக்காம செருப்புகூட போடாம அழுதுட்டே ஹாஸ்பிடல்க்கு வந்தாங்க

அப்பொழுதுதான் பல்லவியை கார்த்திக் பார்த்தான்.

அழுது அழுது சிவந்த கண்ணும் முகமுமாய் நின்றவளை பார்த்தவன் மனம் ஏதோ செய்தது.

கார்த்திக் :பல்லவி எனக்கு ஒண்ணும் இல்லை நீங்க பயப்படாத

பல்லவி அவனை பார்த்தவாறு நின்றிருந்தாள் பேசவில்லை.

கார்த்திக் :என்ன ஆச்சு பல்லவி ஏன் எதுவும் பேசமாட்டேங்கிற

  பல்லவி அருகே நடந்து சென்றான். பல்லவி அவனை பார்த்தவாறே மயங்கி விலைபோக அவளை ஒரு கையால் தாங்கி பிடித்தான். அவளை தூக்கி கட்டிலில் படுக்க வைத்தவன் தன் அடிபட்ட கையிலிருந்து வழிந்த ரத்தத்தை கவனிக்கவில்லை. விஷ்ணு சென்று மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அவளை சோதித்து விட்டு திடீர்  அதிர்ச்சி  என்றும் அதனால்தான் மயக்கம் என்று கூறினார்.கார்த்திக்கின் ரத்த கசிவிற்கும் மருந்து அளித்தார். காயத்ரி விஷ்ணுவிடம் நடந்ததை கேட்டு அறிந்து கொண்டாள். பாட்டியையும் சமாதானப்படுத்தினாள்.

சிறிது நேரம் சென்ற பிறகு பல்லவி கார்த்திக் விஷ்ணு மூவரும் வீடு திரும்பினர்.

சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )Where stories live. Discover now