பாட்டி : அவன் பிறந்த உடனே அவனோட அப்பா இராணுவத்தில் இறந்துட்டார். அவனுக்கு 10 வயசாகும்போது என்னோட பொண்ணும் நோய் வந்து இறந்துட்டா. இவன் பிறந்ததுனாலதான் இவனோட அப்பா இறந்திட்டாருனும் இவனோட ராசி சரி இல்லனும் சொல்லிட்டாங்க சுத்தி இருந்தவங்க.
இதெல்லாம் சின்ன வயசிலேயே அவன் மனசை பாதிச்சிடுச்சி நிறைய அழுவான் அப்போ எல்லாம் அவன் அம்மா சமாதானப்படுத்துவா ஆனா அவளும் போன பிறகு சமாதானப்படுத்த யாரும் என்னோட பையனுக்கு அவனோட தங்கச்சினா உசுரு அவ விதவை ஆனதுக்கு காரணம் கார்த்திக்கோட ராசிதானு அவன் மேல எப்போவும் எரிஞ்சி விழுவான் தன்னோட தங்கச்சி சாவுக்கும் இவனையே காரணம் சொல்லி சுடுகாட்டுக்கு போய்ட்டு வந்து அழுது கூட முடிக்காத பிள்ளை முதுகுல சூடு போட்டுட்டான் மா அவன் அழுத அழுகை இருக்கே அதை பார்த்த பிறகும் மனசு கேக்கல அதான் அந்த வீட்டை விட்டு வந்துட்டோம் அப்புறம் கஷ்ட பட்டு பல வீட்ல வேலை பாத்து படிக்க வச்சேன் அவனும் ஹாஸ்டல்ல சேர்ந்தான்.அப்புறம் விஷ்ணு ரெண்டு மூணு பிள்ளைங்க நண்பர்கள் ஆனாங்க லீவுக்கு வருவான் சந்தோசமாதான் போச்சி அப்புறம் அப்புறம்.
பல்லவி :சொல்லுங்க பாட்டி எதையும் மறைக்காதீங்க
பாட்டி :அது அவன் கல்லூரி படிக்கிறப்போ ஏதோ கேம்ப் போறப்போ ஏதோ ஒரு பொண்ணை விரும்பி இருக்கான் ஆனா அதை அந்த பொண்ணுகிட்ட சொல்ல போகும்போது அவளுக்கு அவ குடும்பம் அச்சிடேன்ட் ஆகி இறந்து இந்த பொண்ணும் சுயநினைவில்லாம இருந்திருக்கா இவன் ஹாஸ்பிடல் சேர்த்துட்டு அவ சரியான உடனே சொந்தக்காரங்க வந்த பின்னாடி அவ நல்லா இருக்கானு தெரிஞ்ச பிறகு வந்துட்டான் தான் அளவுக்கு அதிகமா யார் மேலயாவது அன்பு வச்சா அது அவங்களையோ பாதிக்குதுனு இவனே நினைச்சு தள்ளி இருக்கான். எல்லார்கிட்டயும் பேசுறான் எப்பயாவது சிரிக்கிறான் எல்லாத்துக்குமேல ஒதுங்கியே இருக்கான் உன்ன கூட கல்யாணம் பண்ணலைன்னா செத்துப்போய்டுவேன் சொன்ன பிறகுதான் ஒத்து கிட்டான் நீதான்மா அவனை தொலைந்து போன சிரிப்பை திரும்பி கொண்டுவரனும்.
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்