இன்றைய தினம் பல்லவிக்கு கடினமாக இருந்தது. எப்பொழுது பள்ளி முடியும் என்று காத்துக்கொண்டிருந்தாள். பள்ளி முடிந்ததும் தாத்தாவின் வீட்டிற்கு சென்று விட்டாள் பாட்டியிடம் தொலைபேசியில் தாத்தாவின் வீட்டிற்கு செல்வதாக கூறிஇருந்தாள்.
தாத்தா வீடு :
பல்லவி :தாத்தா எப்படி இருக்கீங்க
தாத்தா :அட வாமா பல்லவி. மாப்பிள்ளை எப்படி இருக்காரு
பல்லவி :அவருக்கு என்ன தாத்தா நல்லா இருக்காரு
தாத்தா :என்னமா எதாவது மாப்பிள்ளை கூட எதாவது பிரச்னையா
பல்லவி :இல்ல தாத்தா. உங்களை பாக்கணும்னு தோணிச்சு
தாத்தா :அப்டியே உன்னோட பாட்டி மாதிரியே இருக்க
பல்லவி :பாட்டி மாதிரியா புரியல தாத்தா
தாத்தா :கோவம் இருந்தா அவளோட முகமே காட்டி குடுத்துடும். உன்னோட முகம் மாதிரி சிவந்துடும்.
பல்லவி :அப்போ உங்களுக்கும் பாட்டிக்கும் சண்டை வருமா. உங்களுக்குள்ள சண்டை வந்தா எப்படி சமாதானம் ஆவிங்க. பாட்டி வந்து பேசுவார்களா இல்ல நீங்க பேசுவீங்களா
தாத்தா :அதுவா எங்களோட முதல் சண்டை அப்போ யார் பேசுறதுன்னு ரெண்டு பேருக்குமே தயக்கம். இப்டியே ரெண்டு நாள் போச்சு திடீர்னு உன்னோட பாட்டி வந்து அழ ஆரம்பிச்சிட்டா
பல்லவி :இதுக்கப்றம் பாட்டி அழறத பாத்து நீங்க சாரி கேட்டு சமாதானம் ஆகி இருப்பீங்க சரியா.
தாத்தா :அதான் இல்ல
பல்லவி :அப்புறம்
தாத்தா :என்ன அடிக்க ஆரம்பிச்சிட்டா. இனி பேசாம இருக்கவே கூடாதுனு சொன்னா அவளோட கை என்ன அடிச்சு சிவந்து போச்சு. அப்போ அழுது கிட்டே சொன்னா என்கிட்ட இனி நமக்குள்ள சண்டை எவ்ளோ வந்தாலும் பேசாம இருக்க கூடாது. அப்படி பேசாம இருக்கலாம்னு நினைச்சீங்க என்னோட கை சிவக்குற அளவுக்கு உங்க கன்னம் சிவந்திடும். அப்போல இருந்து சண்டை எப்போ வந்தாலும் நாங்க அண்ணைக்கே சமாதானம் ஆயிடுவோம்
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்