காயத்ரி தட்டுத்தடுமாறி கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டாள். பின்னே ஏதோ சத்தம் கேட்க அடிப்பதற்கு தயாராக திரும்பியவள் சட்டென விளக்கு வெளிச்சம் படர அதிர்ச்சியானாள். அங்கே பல்லவி கார்த்திக் விஷ்ணு நின்று கொண்டிருந்தார்கள். காயத்ரியை பார்த்து அதிர்ச்சியானார்கள் ஏனெனில் கையில் கத்தியோடு நின்றிருந்தாள்.
காயத்ரி :நீங்களா
பல்லவி :நாங்கதான்
விஷ்ணு :ஏன்மா கையில கத்தியோட நிக்கிற
காயத்ரி :இதென்ன விளையாட்டு நான் பயந்துட்டேன் தெரியுமா எனக்கு வர்ற கோவத்துக்கு உன்ன
விஷ்ணு :என்ன கத்தியால குத்திடுவியா
காயத்ரி :என்ன பேச்சு இது (காயத்ரியின் கண்களில் நீர் தேங்கியது )
விஷ்ணு :சாரி டி அழாத சாரி
கார்த்திக் :இங்க ரெண்டு பேர் இருக்கோம்
காயத்ரி :ஆமா எதுக்கு இதெல்லாம்
பல்லவி :அடடா பொண்ணு பிறந்தநாள் கூட மறந்தாச்சா
காயத்ரி :அட ஆமா பிறந்தநாள்
விஷ்ணு :சரி வா கேக் வெட்டலாம்
காயத்ரி:எப்போ இதெல்லாம் பண்ணீங்க
பல்லவி :முதல்ல கேக் வெட்டு அப்புறம் பேசு
காயத்ரி :என்ன எழுதி இருக்கு இதுல happy birthday sornaka
விஷ்ணு :பிடிச்சிருக்கா
காயத்ரி :பிடிச்சிருக்கு ☺
கேக் வெட்டிய பிறகு சிறிது நேர அரட்டைக்கு பின்னர் பல்லவி காயத்ரிக்காக வாட்ச் ஒன்றை அளித்தாள்
கார்த்திக் கோல்டு ரிங் ஒன்றை அளித்தான் அதில் my little sister என்று எழுதி இருந்தது. விஷ்ணு பட்டு புடவை ஒன்றை அளித்தான்.
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்