அப்பொழுதுதான் உடற்பயிற்சி செய்துவிட்டு கார்த்திக் உள்ளே வந்தான்
பல்லவி உறங்கிக்கொண்டிருந்தாள்.
அவளை பார்த்துக்கொண்டே கட்டிலுக்கு அருகே அமர்ந்திருந்தான் அவனின் பார்வையின் தாக்கமோ என்னவோ சட்டென விழித்துவிட்டாள். அவள் விழித்தவுடன் பார்வையை வேறுபுறம் திரும்பிகொண்டான்.பல்லவி கண் விழித்ததும் மணியை பார்த்தாள் மணி 7 ஆகி இருந்தது. மணியை பார்த்ததும் சட்டென கட்டிலை விட்டு இறங்கியவள். காலில் இருந்த காயத்தை மறந்து தரையில காலை வேகமாக பதித்தாள். வலியில் சற்று அவள் தடுமாற அவளை கார்த்திக் பிடித்து உட்கார வைத்தான்.
கார்த்திக் :என்ன பண்ற நீ
பல்லவி :இல்ல எனக்கு வேலைக்கு டைம் ஆகுது உங்களுக்கும் சாப்பாடு செய்யணும் அதான்.
கார்த்திக் :அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். இண்ணைக்கு நீ லீவ் போடு
பல்லவி :நாளைக்கு பிள்ளைங்களுக்கு பரீட்சை இருக்கு நான் போலான்னா அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க
கார்த்திக் :நீ நிக்கவே கஷ்டபட்ர அப்புறம் எப்படி நடப்ப. விழுந்தான்னா என்ன பண்ணுவ.
பல்லவி :நா விழமாட்டேன் அப்படி தடுக்குனா தாங்கி பிடிக்க நீங்க இருக்கீங்களே
கார்த்திக் :என்ன சொன்ன
பல்லவி : ஒண்ணும் இல்லை.பிலீஸ்ங்க நா வேலைக்கு போணும்.
கார்த்திக் :சரி போய் ரெடி ஆகு.
பல்லவி :thankyou
கார்த்திக் பல்லவி வருவதற்குள் உணவை வாங்கி வந்திருந்தான்
கார்த்திக் :வா பல்லவி சாப்பிடு. இண்ணைக்கு நா கடையில இருந்தே வாங்கிட்டேன்
பல்லவி :நானே சமைச்சிருப்பேன்(எனக்காக இதெல்லாம் பண்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சொல்ல தா பயமா இருக்கு )