Hello friends ellarum epdi irukeenga. story niyabagam iruka. Sari vanga storyku povom.
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
கார்த்திக் பல்லவி இருவரும் நடந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
கார்த்திக் நேராக தன்னுடைய அறைக்கு சென்று விட்டான். பல்லவி பாட்டி அறைக்கு சென்றாள் அவளைக்கண்டதும் பைரவா (அதாங்க நம்ம பல்லவி பார்த்து பயந்த நாய் ) ஒடி வந்தது பைரவனின் குரல் கேட்டதும் பாட்டி எழுந்துவிட்டார்.பல்லவி :பாட்டி சாப்டீங்களா
பாட்டி :சாப்பிட்டேன் மா. இண்ணைக்கு எப்படி போச்சி.
பல்லவி :நல்லா போச்சு பாட்டி.
பாட்டி :சரிம்மா நீ போய் தூங்கு
பல்லவி :நீங்க மாத்திரை இன்னும் போடலை இல்ல பாட்டி.
பாட்டி :போட்டேன் மா
பல்லவி :பொய் சொல்றிங்க
பாட்டி :நான் ஏன் மா பொய் சொல்லப்போறேன்
பல்லவி :நீங்க ராத்திரி சாப்பிடுற மாத்திரை நேத்தே தீர்ந்துடிச்சு அப்போ எப்படி இண்ணைக்கு சாப்பிடறீங்க.
பாட்டி :போலீஸ்காரன் பொண்டாட்டி இல்ல இப்படித்தான் இருப்ப.
பல்லவி :பேச்சை மாத்தாதிங்க. இந்தாங்க சாப்பிடுங்க.
பாட்டியை மாத்திரையை சாப்பிட வைத்தவள் உறங்க சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்.
அறையில் கார்த்திக் இல்லாததை கண்டவள் மாடிக்கு சென்று இருப்பான் என்று நினைத்தாள்.கார்த்திக் எப்பொழுதும் இரவில் தனிமையில் மாடியில் இருப்பது வழக்கம். பல்லவி உடை மாற்றி கொண்டிருக்கும் பொது கார்த்திக் சரியாக உள்ளே வந்தான்.
பல்லவி அதிர்ச்சியில் கத்த போக அவளது வாயை கையால் கார்த்திக் மூடினான்.இருவருக்கும் இடையே விரல் அளவு இடைவெளி மட்டுமே இருந்தது.பல்லவியால் எதுவும் பேச முடியவில்லை. கார்த்திகை பார்த்தாள் அவளது பார்வையில் தடுமாறியவன் சுதாரித்துக்கொண்டு பேச ஆரம்பித்தான்.
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்