கார்த்திக் விஷ்ணு வேலைக்கு சென்றனர்.
பல்லவி ஜான்சி சொன்னதையே யோசித்துக்கொண்டிருந்தாள்.
காயத்ரி :என்ன டி யோசிக்கிற
பல்லவி :லவ் பத்திதான்
காயத்ரி :என்னது நீ லவ் பத்தியா
பல்லவி :ஆமா. நீ அண்ணாவை எப்படி காதலிக்க ஆரம்பிச்ச
காயத்ரி :அது தெரியல. ஆனா அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு அவர்ன்னா உயிர்.
பல்லவி :இந்த காதலை எப்படி கண்டுபிடிக்கிறது
காயத்ரி சிறிது நேரம் யோசித்தாள்
காயத்ரி :நீ அண்ணாவை காதலிக்கிறியா
பல்லவி :இல்லை இல்லை
காயத்ரி :அப்புறம் ஏன் இந்த மாதிரி கேள்வி கேக்குற
பல்லவி :சும்மாதான் சொல்லு.
காயத்ரி :காற்றின் மொழி படத்துல சொல்ற மாதிரி மணிஅடிக்கும் லைட் அடிக்கும்
பல்லவி :அது படத்துல நடக்கும். நிஜத்துல
காயத்ரி :நம்ம காதலிக்கிறவங்கவ கிட்ட இருந்தாலே ஒரு பாதுகாப்பான உணர்வு வரும். அவங்க சின்னதா சிரிச்சது கூட மனசுல பொக்கிஷமா இருக்கும்.
மொத்தத்துல நம்ம காதலிக்கிறவங்க
சின்னதா அசைஞ்சா கூட அதிசயம்தான்.
அவங்க மட்டும்தான் உலகமா தெரிவாங்க. அவங்கள பாக்குறதுக்காக மனசு ஏங்கும் ஆயிரம் முறை பார்த்தாலும் புதிதாக பாக்கிறது மாதிரியே இருக்கும்.பல்லவி :அட போமா
காயத்ரி :என்னது
பல்லவி :சாப்பிடுறியா
காயத்ரி : நமக்கு சோறுதான் முக்கியம். சாப்பிடலாம்
இருவரும் சாப்பிட்டனர் கூடவே பைரவனும் சேர்ந்து கொண்டான்.
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்