Hello friends Innum oru varathuku story update panna mudiyathu adanala na innaiku update panra ethavathu solanumna comment panunga.
vanga storyku polam😇😇😇😇
சுந்தரி பாட்டி கூறியதை கேட்டு இருவரும் அமைதியாக இருந்தனர்.
பாட்டி :இல்ல சுந்தரி பொண்ணு பாத்துருக்குறது விஷ்ணுக்கு (என்று சைகை செய்தார் )
சுந்தரி பாட்டி :ஓ அப்டியா. என்ன மன்னிச்சுடுங்க.
பல்லவி :ஐயோ அதெல்லாம் ஒண்ணும் இல்லைப்பாட்டி நீங்க பெரியவங்க அப்படியெல்லாம் பேசாதீங்க.
கார்த்திக் எதுவும் பேசவில்லை
சுந்தரி பாட்டி தனியாக கார்த்திக் பாட்டியுடன் பேசினார்
சுந்தரி :ஏண்டி இந்த பொண்ணையே பேசாம நம்ம கார்த்திக்கு முடிச்சிடுடி. லட்சணமா இருக்கா.
பாட்டி :அதைத்தான் நானும் யோசிச்சேன்
அப்பொழுது அங்கே காயத்ரியும் காயத்ரியின் அம்மா அப்பாவும் பல்லவியின் தாத்தாவும் வந்தார்கள் பொதுவான பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கியமான பேச்சுவார்த்தை ஆரம்பித்தது அதாங்க நம்ம காயத்ரி -விஷ்ணு நிச்சயதார்த்தம்.
ஒரு வழியாக நிச்சயதார்த்தம் அடுத்த வாரம் என்று பேசி முடிவாகிவிட்டது.
எல்லோரும் சாமி கும்பிட்டுவிட்டு சென்றுவிட்டனர். காயத்ரி பல்லவி பேசிவிட்டு வருவதாக கூறினார்கள் அனைவரும் சென்று விட்டனர்.
பல்லவி :என்ன டி அண்ணா எப்போ வராங்க
காயத்ரி :எப்படி டி கண்டுபிடிச்ச
பல்லவி :பேசிக்கிட்டே கோவில் வாசல்ல கண்ணு இருக்கு அதோட இண்ணைக்கு நீ சாரீ கட்டியிருக்க ஸ்கூலுக்கு சாரீ கட்டவே அழுவ இப்போ இவ்ளோ அழகா வந்திருக்க அதான்.

அப்பொழுது அங்கே விஷ்ணுவும் கார்த்திக்கும் வந்தனர்.
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்