பல்லவி :இங்க பாருங்க தண்டனை குடுக்குற அளவுக்கு நான் பெரிய தப்பு பண்ணலன்னு நினைக்கிறேன். அதனால தண்டனை வேண்டாம். நான் பாவம் இல்லையா
பல்லவியிடம் விளையாட்டிற்குதான் தண்டனை என்று கூறினான் ஆனால் அவளது பாவமான முகம் அவனுடைய கல்லூரிக்காலத்து குறும்பை திரும்ப கொண்டு வந்தது.
கார்த்திக் :இங்க பாருங்க நீங்க பெரியவங்க நான் சின்ன பையன் அடம் புடிப்பேன் அதனால தண்டனை உண்டு
பல்லவி :நான் பண்ணமாட்டேன்
கார்த்திக் :ஓ அப்டியா நான் சொல்றத நீ செய்யலைன்னா இந்த வீடியோவ எல்லார்கிட்டயும் காட்டுவேன்
பல்லவி :என்ன வீடியோ
கார்த்திக் :என்கிட்ட மரியாதையா பேசுன இல்ல அந்த வீடியோ
பல்லவி :இதை எப்போ எப்படி எடுத்தீங்க
கார்த்திக் :நீங்க டீச்சர்னா நான் போலீஸ் நீங்க ஸ்டுடென்ட்ஸ் கூட இருக்குறவங்க. நாங்க கிரிமினல்கூட இருக்குறவங்க நாங்க எப்போவும் விழிபோடதான் இருப்போம். இப்போ சொல்றத பண்றியா
பல்லவி :நான் பண்றேன். ஆனா எனக்கு கொஞ்சம் பசிக்குது உங்களுக்கும் பசிக்கும் நீங்களும் சாப்பிடுங்க. என்னோட கைய விட்டீங்கன்னா ரெண்டுபேரும் சாப்பிடலாம்
கார்த்திக் :சரி இப்போ மணி 9.15 ஆகுது. சரியா பத்து மணிக்கு பனிஷ்மென்ட் சரியா
பல்லவி உடை மாற்றிக்கொண்டு வந்தாள் பிறகு கார்த்திக் பல்லவி இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். கார்த்திக்கு சிறிய அடி என்பதால் அவன் மிகவும் சாதாரணமாக இருந்தான் ஆனால் சாப்பாடு மட்டும் வேகமாக சாப்பிட்டான். திடீரென்று அவனுக்கு விக்கல் எடுக்க ஆரம்பித்தது
பல்லவி :என்னங்க இது கொஞ்சம் பொறுமையா சாப்பிடலாம் இல்ல
அவனுடைய தலையில் தட்டிக்கொடுத்துவிட்டு தண்ணீர் குடிக்க சொன்னாள் அவளுடைய செயல் அவனுடைய அம்மாவின் ஞாபகத்தை வர வைத்தது.
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்