பல்லவி ஆசிரியர்கள் அறைக்குள் நுழைய அங்கே காயத்ரியை பார்த்தாள்
பல்லவி :நீ ஏன் டி வந்த
காயத்ரி :எப்போ வந்தேன்னு கேப்பேனு பார்த்தா ஏன் வந்தேன்னு கேக்குற
பல்லவி :அது இல்ல டி இந்த மாதிரி நேரத்துல இப்படி வேலைக்கு வரணுமா அண்ணா எப்படி ஒத்துக்கிட்டாரு
காயத்ரி :வீட்டுல சும்மா இருக்க முடியல அவரும் வேலை செய்ய விடறது இல்ல நேத்து செக்க்கப் போனப்போ டாக்டர் கூட சொல்லிட்டாங்க வேலைக்கு போலாம்னு அதான் வந்துட்டேன் அவர் முதலில் ஒத்துக்கல அப்றம் ஒத்துக்கிட்டாரு.
பல்லவி :அப்போ அர்ச்சனா டீச்சர்
காயத்ரி :அவங்க வேற ஊருக்கு போறாங்களாம்
பல்லவி :அவங்க நம்பர் இருக்கா உன்கிட்ட அவங்க பேமிலி பத்தி தெரியுமா
காயத்ரி :நீ எதுக்கு கேக்குற
பல்லவி :ஒண்ணும் இல்ல சும்மா தெரிஞ்சிக்கலாம்னு இத்தனை நாள் ஒண்ணா வேலை செஞ்சுட்டு இப்போ சொல்லாம போய்ட்டாங்க அதான்
காயத்ரி :ஆமா பல வருஷம் பழக்கம் கிளாஸ்க்கு போ நான் அப்புறமா விஷ்ணுகிட்ட கேட்டு வாங்கி தரேன்
பல்லவி :ஹ்ம்ம் வா கிளாஸ்க்கு போலாம் மெதுவா நட
காயத்ரி :நீயுமா போடி போ
பல்லவி :நீ சாப்டியா மாத்திரை போட்டியா
காயத்ரி :அம்மா தாயே நான் சாப்பிட்டேன் என்னோட கிளாஸ் வந்துடிச்சி நான் போறேன் நீ உன்னோட கிளாஸ்கு போமா
பல்லவிக்கு அன்றைய தினம் நன்றாக நடந்து கொண்டிருந்தது . பல்லவிக்கு கார்த்திக்கின் கடந்தகாலம் பற்றிய கவலை இல்லை அவளுடைய கவலை எல்லாம் கார்த்திக் மனதில் தன்னுடைய இடத்தை பற்றித்தான். தேர்வுகள் நெருங்கி கொண்டிருந்ததால் பாடங்கள் அனைத்தும் முடிந்து விட்டது பல்லவி மாணவர்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்தாள்.
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்