கார்த்திக் மௌனமாக இருந்தான் பல்லவி பேச ஆரம்பித்தாள்
பல்லவி :நான் உங்களை மாதிரி காதலிக்கிறவங்களோட சந்தோஷத்துக்காக காதலை விட்டு தர்ற அளவுக்கு நான் காதலிக்கில கார்த்திக். என்னோட காதலை யாருக்காகவும் விட்டு கொடுக்க முடியாத அளவுக்கு காதலிக்கிறேன். நான் யாரு கேட்டாலும் என்னால முடிஞ்சா விட்டுக்கொடுத்திடுவேன் ஆனா உங்களை நீங்களே கேட்டாலும் விட்டு கொடுக்க மாட்டேன்.
உங்களுக்கு என்ன கார்த்திக் விவாகரத்து வேணுமா இந்த ஜென்மத்துல நான் தர மாட்டேன். நம்ம இப்டியே இருக்கலாம் நான் உங்களை காலம் முழுக்க காதலிச்சிட்டே இருக்கேன். நீங்க உங்க காதலை மறைச்சு நடிச்சிகிட்டே இருங்க. ஏன்னா உங்களை விட்டு விவாகரத்து வாங்கி எனக்கு எதாவது ஆகி
கார்த்திக் :இப்படியெல்லாம் பேசாத பல்லவி
பல்லவி :உண்மையை சொல்றேன் கார்த்திக். கல்யாணத்துக்கு அப்புறம் எதாவது ஆகி உங்களுக்கு தெரியாம இருந்து என்னை கடைசி வர பாக்க முடியாமலேயே போச்சுன்னா என்ன பண்றது நான் இந்த உலகத்தில இருக்குற வரைக்கும் உங்க மனைவியா இருக்க ஆசை படறேன் இறக்கும்போதும் திருமதி கார்த்திக்கா சாக ஆசை படறேன்.
கார்த்திக் எனக்கு ரொம்ப தூக்கம் வருது நான் தூங்க போறேன் நீங்களும் தூங்குங்க நாளைக்கு வேலைக்கு போணும்.
கார்த்திக்கிற்கு ஒன்றும் புரியவில்லை அவளாக பேசினாள் இப்போது உறங்க சென்று விட்டாள்.
கார்த்திக் (m. v): என்ன இவ இப்டி சொல்லிட்டு போறா நான் காதலிக்கிற பொண்ணு என்னையும் காதலிக்கிறா என்னோட மனைவியாவும் இருக்கா ஆனா என்னால அதை நினைச்சு சந்தோச பட முடியல இவளை விட்டு விலகுறது தான் சரி. கொஞ்சம் நாள் கழிச்சு இவளுக்கு புரியவைப்போம்
அடுத்தநாள் வழக்கம் போல காலையில் பல்லவி வேலைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தாள் பாட்டியும் வீட்டிற்கு வந்திருந்தார் பல்லவி கலைந்த அனைத்து பொருட்களையும் ஏற்கனவே சரி செய்து விட்டாள். எனவே பாட்டி எதையும் கண்டு பிடிக்கவில்லை.பல்லவி சீக்கிரம் தயாரானாலும் பாட்டியிடம் பேசிக்கொண்டே பள்ளிக்கு செல்ல தாமதம் ஆக்கிகொண்டிருந்தாள்.
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்