பல்லவி :வாங்க பாட்டி
பாட்டி :உன்னோட முகத்தை பார்த்த பிறகுதான் எனக்கு சந்தோசமா இருக்கு
பல்லவி :எனக்கும்தான் பாட்டி
பாட்டியும் பல்லவியும் பேசிக்கொண்டிருந்தனர் சிறிது நேரம் சென்ற பிறகு கார்த்திக் வேலைக்கு செல்ல தயாரானான்.
கார்த்திக் :பாட்டி நான் வேலைக்கு கிளம்புறேன்
பாட்டி :பாத்துபோய்ட்டு வறேன்
வாசலுக்கு சென்று பைக்கில் ஏறினான்
நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்ல தோணலை என்று நினைக்கும்பொழுதே கார்த்திக் அழைத்தான்.
பல்லவி :சொல்லுங்க கார்த்திக்
கார்த்திக் :நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு சொன்னேன் இல்ல
பல்லவி :சொல்லுங்க
கார்த்திக் :மூணு வார்த்தை தான்
பல்லவி :சொல்லுங்க (பல்லவிக்கு வார்த்தைகள் வர மறுத்தது )
கார்த்திக் :நீ ரொம்ப அழகு
பல்லவி :அவ்ளோதானா
கார்த்திக் :ஆமா நீ நன்றி எல்லாம் சொல்ல தேவையில்லை
பல்லவி (m.v):நன்றி வேற சொல்லணுமா இன்னும் கொஞ்சம் நேரம் பேசுங்க நான் கடிச்சு வச்சிடுறேன்
கார்த்திக் :ஒய் பல்லவி என்ன யோசனை
பல்லவி :ஒண்ணும் இல்லை
கார்த்திக் :போயிட்டு வறேன் டி என்னோட பொண்டாட்டி
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான் நல்ல அழகியென்பேன்.
பாடலை முணுமுணுத்துக்கொண்டே சென்று விட்டான்.
பல்லவி :ரொம்ப சந்தோசமா இருக்கார்
பாட்டி :என்னமா தனியா பொலம்புற