சென்னை பாரீஸ் நகரின் குடும்ப கோர்ட்..
" மிஸஸ் அனிதா ராகவ் உங்களுக்கு இந்த விவாகரத்துக்கு சம்மதமா??"
அப்படி அந்த குடும்ப வக்கீல் கேட்ட கேள்விக்கு கண்கள் கலங்கிட கண்ணீருடன் " சம்மதம் " என்றாள் அவள் .
அப்பொழுது அந்த வழக்கறிஞர் அந்த காதல் ஜோடிகளை பிரிக்க மனமில்லாமல் மீண்டும் ஒரு முறை கேட்டார் "மிஸஸ் அனிதா நல்லா யோசிச்சுதா இந்த முடிவு எடுத்திருக்கிங்களா ??" என்று கேட்டார்
"ஆமா சார் ..என்னால இதுக்கு மேல இவங்க கூட வாழ முடியாது !!" என்று வாய் கூசாமல் பொய் உறைத்தாள்.
இந்த பதிலைக் கேட்ட ஒருவனின் கண்கள் கலங்கி உணர்ச்சி வசப்பட்டு " நோ!!!".. என்று கத்தினான்.
அந்த குரல் கேட்ட திசையில் அனைவரும் திரும்பி நோக்கினர்.
" நோ அனி என்னால உன்னையும் ஸ்ருதியையும் பிரிஞ்சு வாழ முடியாது ...ப்ளீஸ்டி நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.." என்று கெஞ்சும் குரலில் கேட்டான் .
" மிஸ்டர் அனிஷ் ராகவ் கோர்ட்ல இப்படி கத்த கூடாது!" என்று நீதிபதி எச்சரித்தார்.
" ஐ யம் சாரி சார்.. கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்!!" என்று கூறிவிட்டு தன் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டான் அந்த அனிஷ் ராகவ்...
" சாரி மிஸஸ் அனிதா ராகவ் உங்களுக்கு விவாகரத்து கொடுக்க முடியாது..உங்க ஹஸ்பன்ட் இதுக்கு சம்மதம் சொல்லவில்லை விவாகரத்து என்பது இரண்டு கட்சியினரும் ஒத்துக்கொண்டாள் தான் கொடுக்க இயலும்.!" என்றார் நீதிபதி.
இதை ஏற்கனவே எதிர்பார்த்தவள் எதுவும் செய்ய முடியாமல் விழித்தாள்..அவளிடம் இருந்த கடைசி வாய்ப்பும் நழுவி விட்டது.. இப்பொழுது அவள் எந்த காரணத்தை வைத்து அவனை பிரிவது? அவள் அவனை விட்டு பிரியவில்லை என்றால் அனிஷின் உயிருக்கு ஆபத்து ஆயிற்றே.
அங்கே இருந்து தன்னோட இரண்டு வயது குழந்தையத் தூக்கிக் கொண்டு நகர்ந்தாள் அனி ..
YOU ARE READING
Tharame Tharame ❤
Romanceஅன்பு என்றால் என்ன வென்றே தெரியாத நம் நாயகனுக்கு இது தான் அன்பு என்று காட்டுகிறாள் நாயகி 🤩