" ஹலோ சார் என்னைய எங்க கூட்டிட்டு போறீங்க ?? நல்லா கேட்டுக்கோங்க எனக்கு கராத்தேலா தெரியும் ...பீ கேர்ஃபுள் !!!" என்று எச்சரித்தவளை பார்த்து " ஓ அப்படியா சரி என்ன பெல்ட் வாங்கிருக்க ??" என்று அவன் கேட்டதும் ' ஐயோ கராத்தே க்கு பெல்ட்லாமா குடுப்பாங்க ???' என்று மைன்ட் வாய்ஸ்னு நினைத்து சத்தமாக முனகினாள் . அவனுக்கோ சிரிப்பை அடக்க முடியாமல் உதட்டை கடித்து கொண்டான்
" இப்போ எதுக்கு சிரிக்குறீங்க ??" என்று அவள் கேட்டதுற்கு இல்லை என்று தலை அசைத்தான். விடாமல் பேசிக்கொண்டு இருந்தவள் அவன் கூட்டி சென்ற இடத்தை பார்த்து வாயை அடைத்துக் கொண்டாள்..ஏனென்றால் அவன் கூட்டிச்சென்றது மெட்டர்னல் வார்டு ( maternal ward ) அங்கே நிறைய அம்மாக்கள் அவர்களின் குட்டி குழந்தைகளை கொஞ்சி கொண்டு இருந்தனர்... நிறைய குடும்பங்கள் அங்கே சந்தோஷத்தில் இருந்த பல குடும்பங்களை பார்த்தாள்.." எனக்கு ரொம்ப டென்ஸ்டா இருக்கும் போது இந்த இடத்துக்கு வருவேன்..அப்போலாம் எனக்கு என்னோட மைன்ட் ஃப்ரீ ஆயிடும்.." என்று அவன் கூறினான்..
அமைதியாக அங்கிருந்த குழந்தைகளை இரசித்துக் கொண்டு இருந்தவளை " க்கும் ..." என்று தொண்டை செறும்பியவனை திரும்பி பார்த்தவள் அதிர்ச்சி ஆகி நின்று விட்டாள் . ஏனென்றால் அங்கே அவன் முட்டியிட்டு அவள் முன் நின்றிருந்தான் . " ஐ லவ் யூ அனி❤❤❤ எனக்கு நீனா ரொம்ப இஷ்டம் . எனக்கு ஏன்னே தெரியல . எனக்கு சின்ன வயசுலயே அம்மா இறந்துட்டாங்க..சோ அம்மாவோட அன்பும் அரவணைப்பும் எனக்கு கிடைச்சதே இல்ல ..உன்னால அத குடுக்க முடியுமா ???" என்று கண்கள் முழுக்க காதலுடன் அவன் கேட்டபோது அவளுக்கு மறுக்க தோன்றவில்லை ... ஆனால் அவள் எதுவும் கூறவில்லை அமைதியாக இருந்தாள். அவளின் தயக்கத்தை உணர்ந்தவன்.." யூ டேக் யுவர் ஓன் டைம் ...பட் ரொம்ப நாள் ஆக்கிராதப்பா என்னால வெயிட் பண்ண முடியாது!!! " என்று அவன் கண் சிமிட்டினான்.. அவளுக்குள் ஏதோ புது விதமான உண்ர்வு...💙💙💙 அது என்று அவளுக்கு புரியவில்லை...
அவளை ஃபர்ஸ்ட் ஃப்ளோர்க்கு அழைத்து சென்றான்..அங்கே அவளை அணைத்து " டூ வெள் !!!" என்று வாழ்த்தி விட்டு சென்றான் அவளின் அனிஷ் 💞💞💞அப்படியே அவள் உறங்கி போனாள் . காலையில் இவள் எழுவதற்கு முன் அனிஷூம் ஸ்ருதியும் எழுந்து விட்டனர்..எழுந்தால் கூட பரவாயில்லை ஆனால் ஸ்ருதி அனிஷின் மடியில் அமர்ந்து பிஸ்கட்டை நொருக்கி கொண்டு இருந்தாள் .. இது என்னடா தப்புன்னு நீங்க கேக்கலாம் பட் டீய கீழ கொட்டிடாங்களே .. கோபத்துடன் எழுந்தவள் " அம்மி பிக்கட்டு " என்ற தன் மகளின் மழலை மொழியில் கேட்ட போது அவளின் கோபம் பறந்தது..பின் இருவரையும் கிளப்பி கீழே அனுப்பி வைத்தாள்..பின் அவள் கிளம்பி கீழ வந்தபோது அனிஷூம் ஸ்ருதியும் சேர்ந்து கார்ட்டூன் பார்த்து கொண்டு இருந்தனர் ( நம்ம சின்சான் தாப்பா !!!😁😁) " அனிஷ் உங்களுக்கு இன்னைக்கு ஹாஸ்பிடல் போற ஐடியா இருக்கா இல்லையா ???" என்று அவள் கேட்டதுக்கு " இல்லவே இல்லை!!" என்று ஹாலில் இருந்து கத்தினான் " பின்ன இன்னைக்கு அப்பாவும் பொண்ணும் என் உயிர வாங்குறதா இருக்கீங்களா ???" என்று கூறிக்கொண்டே ஹாலிற்கு வந்தவளிடம் அனிஷ் ஒரு ரெட் ரோஸ் பொக்கே நீட்டினான்.." என்னடி மொறைக்குற இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா?? உனக்கு ப்ரோபோஸ் பண்ண நாள் அன்னைக்கு உன்கிட்ட ஒண்ணு கேட்டேன்ல அம்மாவோட அன்பும் அரவணைப்பும் ...தாங்ஸ்டி அது எனக்கு குடுத்ததுக்கு !!! " என்று கூறி அவளின் கைகளில் முத்தமிட்டான் அவளின் அனிஷ் 💞💞💞
பின் அவர்கள் இருவரும் அந்த உலகில் இல்லை அவர்களை நினைவிற்கு கொண்டு வந்தது ஸ்ருதியின் அலறல்...அதே சமயம் மொபைல் அழறியது 😕😕😕😕
Guys chinna ud dha srysrypa ...💙💙
ŞİMDİ OKUDUĞUN
Tharame Tharame ❤
Romantizmஅன்பு என்றால் என்ன வென்றே தெரியாத நம் நாயகனுக்கு இது தான் அன்பு என்று காட்டுகிறாள் நாயகி 🤩