அனிஷின் வீட்டை அடைந்த அவள் முதலில் பிரமித்து போனாள் ஏனென்றால் அங்கே இருந்தது வீடு அல்ல மாளிகை ... நுழைவதற்கு முன் ஒரு பெரிய கேட் இருந்தது அதை தாண்டி உள்ளே சென்றால் பாதைக்கு இருப்பக்கமும் புல்வெளி இருந்தது ஆங்காங்கே பெரிய ஆரணமென்டல் மரங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது இருந்தது... அதற்கு நடுவில் அழகான பெரிய கட்டடம் அது பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது...அவள் வாய் பிளந்து கொண்டு நின்று கொண்டிருந்தவிளிடம் நடுத்தர வயது மனிதர் ஒருவர் ஓடி வந்து " அம்மா நீங்கதா அனிதிவாமா???" என்று பவ்மியமாக கேட்டார்.." அங்கிள் நா ஒண்ணு அம்மா கெடையாது என்னைய அனினே கூப்டுங்க!!!😂😂😂" என்று சிரித்த முகத்துடன் கூறினாள்
பொதுவாக அனிஷின் முறை பெண்கள் அவனின் ஒன்று விட்ட தங்கைகள் வந்தார்கள் என்றால் இவரை ' டேய் சுந்தரா...' என்று மரியாதை இல்லாமல் அழைப்பார்கள்...வேலை வாங்கி சாகடிப்பார்கள்... இப்படியே பழகி விட்ட அவருக்கு அனிதாவை மிகவும் பிடித்து விட்டது...
" ஐயோமா ...எனக்கு அப்படி கூப்ட்டு பழக்கம் இல்லயேமா.." என்று தலையை சொரிந்தார்.." சரி விடுங்க அங்கிள் அனிஷ் எப்டி இருக்காரு????" என்று கவலையுடன் கேட்டாள்" தம்பி காலைல இருந்து சாப்டவே இல்லமா யாரையும் ரூம்க்குல்ல விடமாட்றாறுமா.."என்று கவலையுடன் கூறினார்..." சரிங்க அங்கிள் நீங்க போய் சாப்பாடு எடுத்துட்டு வாங்க!!!" என்று அவள் கேட்டதற்கு இணங்க சாப்பாடை எடுத்து கொண்டு கொடுத்தார்...
அவனின் ரூமின் கதவை தட்டியவள்... தயக்கத்துடன் " அனிஷ் ..." என்று அழைத்தாள்...அவள் அழைத்து அடுத்த நொடி கதவு திறந்தது...மூன்று நாளில் அவன் மிகவும் சோர்ந்து போய் இருந்தான்..அவளை முறைத்தான் அவளின் கையில் இருந்த சாப்பாடை பார்த்து கேள்வியாக அவளை பார்த்தான்..' ஐயோ பாக்குறானே..அனி நீ வாய் மூடுன அவன் ஆரம்பிச்சுருச்சுவான்டி!!!" என்று மனதில் நினைத்தவள் " அனிஷ் நீங்க ஏன் சாப்ட மாட்டேனு அடம் பண்ணீங்க???சுமாரா இருக்க உங்க மூஞ்சி சொங்கி மாதிரி ஆயிடுச்சு கொஞ்சம் கூட அறிவே இல்ல உங்களுக்கு...உங்களால பாருங்க நான் கிளாஸ்ல உட்கார்ந்து பாடத்த கவனிக்காம இங்கு வந்து உனக்கு சேவை பண்ண வேண்டியதா இருக்கு..." என்று அழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.." நீங்க ஏன் இன்னும் அங்கேயே நிக்கிறீங்க உள்ள வாங்க தனியா சொல்லனுமா இடியட்!!!" என்று அவனைப் பேச விடாமல் தானே பேசிக்கொண்டு இருந்தாள்... அப்படியே பேசிக் கொண்டு போனவள் அவன் எதையும் கூறாமல் இருக்கவும் திரும்பிப் பார்த்தாள்... அவளை ரசித்துக் கொண்டு இருந்தவன் அவள் பார்த்ததும் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டான் ஆனால் நம்ம ஆளு தான் கேடி ஆச்சே அவள் அவன் பார்ப்பதை பார்த்துவிட்டாள்.. நமட்டு சிரிப்புடன் " என்ன அனிஷ் என்னைய எவ்ளோ நேரம்தான் பார்த்துகிட்டே இருப்பீங்க!!" இங்க வாங்க என்று அவனை அழைத்தாள் அவனும் அவளின் சொல்லு கிணங்க அருகில் வந்தான் " இப்படியா வீட்ல இருக்கப்ப இருப்பீங்க கேவலமா இருக்கு சோ!!!" என்று அலுத்துக் கொண்டே அவனின் கலைந்து இருந்த கேசத்தை சரி செய்தாள் அவள் அவனை பக்கத்தில் அமரவைத்து ஊட்டி விட்டாள் அவனும் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டான் பின் அவனுக்கு கொடுக்க வேண்டிய டேப்லெட்டை அவனுக்கு குடுத்து தண்ணீர் குடிக்க வைத்தாள்...அவனின் ஷர்ட்டை சரி செய்ய போனவளின் கைகளை பிடித்து கொண்டு " இப்போ எதுக்குடி இங்க வந்த???" என்று அவன் கேட்ட கேள்விக்கு புன்னகையுடன் அவனின் உதட்டின் மேல் தன் விரலை வைத்தவள் "ப்ளீஸ் எதுவும் பேசாதீங்க நா பண்ணது தப்புதான் மன்னிச்சிடுங்க ஐ அம் ரியலி சாரி " என்று கெஞ்சும் விழிகளுடன் கேட்டவளிடம் தன் கோபத்தை தொலைத்தான் "அப்போ இனிமே அப்படி சொல்ல மாட்டலல" என்று கேட்டவனிடம் என்று இல்லை என்று தலை அசைத்தாள்....
பின் அவனை உறங்க வைத்து விட்டு கீழே சென்றாள்...சுந்தரத்திடம் " அங்கிள் ஈவினிங் அனிஷ்க்கு சாப்பாடு குடுத்துடுங்க அவங்க சாப்டலனா எனக்கு கால் பண்ணுங்க ஓகேவா???" என்று கூறி தன் நம்பரை அவரிடம் கொடுத்து விட்டு காலேஜிற்கு சென்றாள்..
இவர்களுக்குள் நடந்த அனைத்தும் தெரிந்த ஒரே ஆள் அஞ்சலி தான்... அனிதா மிகவும் உற்சாகமான பெண் அவளை சுற்றி எப்பொழுதும் நிறைய பேர் இருப்பார்கள்!!!❤❤❤ஆனால் அவள் அனைவரிடமும் ஒரு லிமிட் தாண்டி பேச மாட்டாள்...அவள் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒரே நபர் அஞ்சலி தான்...இதுவே அவளுக்கு பின்னாடி உதவ போகிறது என்று அவள் அறிய வில்லை..
நாட்கள் அதன் போக்கில் சென்றது அனிஷூம் அவளும் மிகவும் நெருங்கிய காதலர்கள் என்பதைவிட நெருங்கிய நண்பர்கள் ஆகினர்... ஆனால் அவள் அவனிடம் இன்னும் ஐ லவ் யூ என்று மூன்று மேஜிக்கல் வார்த்தைகளை கூறாமல் டிமிக்கி கொடுத்து கொண்டு இருக்கிறாள்😉😉😉😉
ஆனால் அனிஷ் எப்பொழுதும் அவள் கண்களில் இனம் புரியாத பயத்தை உணர்ந்தான்...அது என்னவாக இருக்கும் என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தான் அனியின் அனிஷ் 💞💞💞💞
Stry epdi pogudhu nu cmts pannunga 💞💞
CZYTASZ
Tharame Tharame ❤
Romansஅன்பு என்றால் என்ன வென்றே தெரியாத நம் நாயகனுக்கு இது தான் அன்பு என்று காட்டுகிறாள் நாயகி 🤩