அனிஷை விட்டு பிரிந்து இன்றுடன் இரண்டு வருடங்கள் ஆகிறது...ஸ்ருதிக்கும் ஐந்து வயது ஆகிவிட்டது..ஆனாலும் ஸ்ருதிக்கு அப்பாவின் ஏக்கம் அதிகரித்து கொண்டுதான் இருந்தது..அனிக்கும் அனிஷின் ஞாபகம் நீங்காமல் தான் இருந்தது..சில சமயம் அனிஷை விட்டு பிரிந்தது தவறோ என்று நினைத்து வருந்துவாள்...ஆனால் தான் பிரிந்ததால் தான் அனிஷிற்கு தகுந்த பெண் மனைவியாக அமைந்து வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று மகிழ்ச்சி அடைவாள்...அன்று தான் அனிஷை விட்டு பிரிந்ததால் தான் இன்று அவன் உயிரோடு இருக்கிறான்...அவள் உள்மனதில் அனிஷிற்கு தான் ஏற்றவள் அல்ல என்பது பதிந்து இருந்தது..அன்று அந்த பெண் அதை கூறியவுடன் சரியென்றே பட்டது..அதான் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கேரளத்துக்கு வந்தாள்..
அனிதா ஸ்ருதியை ஸ்கூலில் டாராப் செய்து விட்டு அவசர அவசரமாக ஹாஸ்பிடல்க்கு விரைந்தாள்...அங்கே உள்ளே நுழைந்த போது அனைவரும் ஏதோ பரபரப்புடன் இருந்தனர்..அவளை பார்த்தவுடன் ஓடி வந்த மேரி சிஸ்டர் " மோளே !! இன்னைக்கு ஏதோ பெரிய டாக்டர் வராங்கலாம் அதனாலதான் உன்ன சீக்கிரம் வர சொல்லி டீன் ஐயா சொன்னாங்க.. அதுக்குள்ள நீயே வந்துட்ட " என்று மலையாளத்தில் கூறினார்...அனி தான் பார்த்து கொள்ளவதாக கூறிவிட்டு டீன் ஆஃபிஸ்க்கு விரைந்தாள்..அவளை கண்டவுடன் ஆனந்த ராஜன் " வாமா அனிதா ...ஸ்ருதிய ஸ்கூல்ல ட்ராப் பண்ணிட்டலமா ...இன்னைக்கு கொஞ்சம் நிறையவே வேலை இருக்கு அதனால ஸ்ருதி ஸ்கூல்க்கு கால் பண்ணி அவள ஆன்ட்டிக்கிட்ட விட சொல்லிட்டேன் மா..உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லலமா ??" என்று கேட்டார்..அவருக்கு அனிதா மேல் அவருக்கு தனி பாசம்.. அவரது மகனை அனிதாவிற்கு கல்யாணம் செய்து வைக்க பிரிய படுகிறார்..அவர் மகன் ராகுலிற்கும் அனியும் ஸ்ருதியும் பயங்கர இஷ்டம்...நல்ல சமயத்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறான்..அனி எங்கே தன் காதலை ஏற்றுக் கொள்ளாமல் போய் விடுவாளோ என்று பயம்...
அன்று வரப்போகும் டாக்டரின் பெயரை மறந்து விட்டோமே என்று நொந்து கொண்டாள் அனிதா...' சரி விடு யார் வந்தா நமக்கு என்ன' என்று நினைத்தவள்..அன்று வரப்போகும் டாக்டரின் அறையை தயார் செய்தாள்..
டேபிலில் நேம் ப்ளேட்டை வைப்பதற்காக ரிஷப்பஷன் சென்றவள் அந்த நேம் ப்ளேட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்...அதே நேரம் அங்கே வந்த ஒரு நெடிய மனிதன் அவள் நேம் ப்ளேட்டை பார்த்து " இது என்னோட நேம் ப்ளேட் தான்..ஐ வில் டேக் திஸ் " என்று கூறிவிட்டு உயிரினும் உயிராய் தன்னுடன் வாழ்ந்த தன் மனைவியை யாரோ ஒருவள் போல் சென்றான் அனிஷ்...
YOU ARE READING
Tharame Tharame ❤
Romanceஅன்பு என்றால் என்ன வென்றே தெரியாத நம் நாயகனுக்கு இது தான் அன்பு என்று காட்டுகிறாள் நாயகி 🤩