"நா மிடில் க்ளாஸ் பொண்ணுதா..." என்று அவள் கூறியவுடன் அவன் கோபத்தின் உச்சத்திற்கு சென்று விட்டான் ..."ஒண்ணு நல்லா புருஞ்சுக்கோ அனி நா நீ மிடில் க்ளாஸ் பொண்ணா இல்ல ஹை க்ளாஸ் பொண்ணாணு பாத்து லவ் பண்ணல எனக்கு உன்ன புடிச்சிருக்கு அவ்ளோதா...ஆனா நீ இப்டி நம்மலுக்கு நடுவுல ஸ்டேட்ஸ் ப்ராப்ளம் கொண்டு வருவனு சத்தியமா நா எதிர்பார்க்கவே இல்லடி..சீ.. நீக்கூட எல்லார் மாதிரி தானடி???"என்று கண்களில் வலியுடன் அவன் கேட்ட பொழுது தான் கூறியது தவறு என்று உணர்ந்தாள்.. ஆனால் அவள் உணர்ந்த பொழுது காலம் கடந்து விட்டது அனிஷ் கோபத்துடன் அங்கிருந்து விலகி சென்று விட்டான்
Ups! Ten obraz nie jest zgodny z naszymi wytycznymi. Aby kontynuować, spróbuj go usunąć lub użyć innego.
அவளுக்கு யாரிடம் என்ன கூறுவது என்று தெரியவில்லை.. அவளுக்கு அவன் எங்கிருக்கிறான் என்றே தெரியாமல் தவித்தாள்..அவன் தன் நண்பர்களிடம் தங்களின் காதலை கூறியிருப்பானா என்று தெரியவில்லை..அவன் யார்??அவன் குடும்பம் எதுவுமே அவள் அறியவில்லை...அவள் தன் தைரியத்தை எல்லாம் திரட்டி கொண்டு அனிஷின் நண்பன் கார்த்திக்கிடம் சென்றாள்.." எஸ்க்யூஸ் மீ அண்ணா!!!" என்று அவள் அழைத்தவுடன் திரும்பியவர்" சொல்லுமா அனிதா !!" என்று அவன் கூலாக தன் பெயரை கேட்டவுடன் ' இந்த சப்ப மூஞ்சிக்கு எப்டி நம்ம பேரு தெரியும்??? சரி அவன்கிட்டயே கேட்போம்...' " உங்களுக்கு எப்டி என்னைய தெரியும்???" என்று கேள்வியாய் அவனை நோக்கினாள் " அதுவாமா..உன்ன ஃபர்ஸ்ட் நாள் பாத்தப்பவே அனிஷ் எங்க எல்லார்கிட்டயும் அனிதா உங்க எல்லாருக்கும் தங்கச்சின்னு சொல்லிட்டான்மா.." என்று புன்னகையுடன் கூறினான்.." அப்போ அண்ணா உங்களுக்கு எங்களுக்குள்ள நடந்தது தெரியுமா???" என்று தயக்கத்துடன் கேட்டவளை பார்த்து " அனிஷ் எப்பவும் அவனோட சந்தோஷத்த மட்டுந்தா ஷேர் பண்ணுவாம்மா அவனோட வலிய அவன் யார்க்கிட்டையும் சொல்ல மாட்டாம்மா..அவன் அப்டி யார்க்கிட்டயாச்சும் சொல்லாறான்னா அவங்கள அவன் அவங்க அம்மாவ மாதிரி நேசிக்குறான்னு அர்த்தம்மா!!!" என்று அவன் கூறியதும் " போதும் னா நா அப்றம் வரேன்" என்று கூறி அங்கிருந்து கண்களில் வலியோடு அங்கிருந்து நகர்ந்தாள்..