தாரமே-15

571 49 20
                                    

அன்று அவர்களின் திருமண நாள்.... திருமண நாளின் முந்தைய இரவு முழுதும் மோனியை தூங்க விடவில்லை .. பேசியே சாகடித்து விட்டாள்..பின் அவளை மிரட்டி உறங்க வைத்தாள்.. காலையில் அவளை எழுப்புவதற்குள் அனைவருக்கும் உறக்கமே வந்துவிட்டது அவ்வளவு களைத்து போய்விட்டனர்..ஆனால் மாப்பிளையோ அனைவரும் எழுவதற்கு முன்னே எழுந்து ரெடி ஆகிவிட்டான்...பின் அனி அடர் சிவப்பு நிற சேலையில் தேவதையாக ரெடி ஆகினாள்.. இயற்கையாகவே அவளுக்கு அழகு முகம் என்பதால் சாதாரண ஒப்பனையிலேயே தேவதையாக ஜொலித்தாள்..அவளை பார்த்த அனிஷோ தன்னவளை பார்த்து ஒரு நிமிடம் இமைக்க மறந்தான்..பின் கட்டிமேளம் ஒலிக்க தன்னவளின் சங்கு கழுத்தில் பொன்தாலியை கட்டினான்..இதுவரை அனிதா ராஜாக இருந்தவள் அனிதா ராகவாக மாறினாள்...பின் அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று தங்கள் இனிய வாழ்வினை ஆரம்பித்தார்கள் அந்த புதிய தம்பதியர்...

இதுவரை தன் பிறந்த வீட்டின் இளவரசியாக இருந்தவள் இப்போது தன் புகுந்த வீட்டின் ராணியாக நுழைந்தாள்.. அனைவரிடமும் பிரியா விடை பெற்று கிளம்பினர் போகும் வழி முழுக்க அழுது கொண்டிருந்த அவளை தன் தோளில் வைத்து அமைதிப்படுத்தினான்... ஆனால் இப்பொழுது அவர்கள் போனது முன்னே அனிதா போன வீடு இல்லை ..இது ஒரு சாதாரண வீடு போன்று இருந்தது..ஆனால் குட்டியாக அழகாக இருந்தது.. யோசனையாக அனிஷை திரும்பிப் பார்த்தபொழுது அனிஷ் சிரித்துக்கொண்டே .... " எனக்கு தெரியும் அனி உன்னோட பயமே என்னோட பணத்த பார்த்து தான் அதனால தான் நான் யு எஸ் போய் சம்பாதுச்ச காசுல இந்த வீட கட்டுனைன்... !!!" என்று கூறி அவளின் முன்நெற்றியில் முத்தமிட்டான்..அனிதாவிற்கோ தன்னவனின் காதலை நினைத்து நெகிழ்ந்து போனாள்..அவளால் எவ்வளவு முயன்றும் தன் அழுகையை நிறுத்த முடியவில்லை..அழுது கொண்டிருந்தவளை தன் கைகளில் ஏந்தி உள்ளே அழைத்து சென்றான் அனிஷ்...

Tharame Tharame ❤Tempat cerita menjadi hidup. Temukan sekarang