தன்னை சுற்றி நடப்பதை எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது அவளால்..அவளால் தன் குடும்பத்தாரிடம் கூறவும் முடியாமல் அனிஷின் அமைதியை தாங்கவும் முடியாமல் அமைதியாக கண்ணீர் வகுத்தாள்..அவள் தயாரானதும் உள்ளே வந்த அவளின் பெற்றோர்கள் தங்கள் மகள் இவ்வளவு அழகா என்று வியந்தனர்...ஆனால் அவளோ தன் அழகை பற்றி எதுவும் கவலை கொள்ளாமல் தன் கவலையில் மூழ்கி இருந்தாள். மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டனர் என்ற செய்தி தெரிந்தவுடன் அவளின் மனம் திக்திக் என்று அடிக்க தொடங்கியது.." அனி மாமாவ பாத்தியா செம ஹான்ட்ஸம்..வா வந்து பாரு" என்று அவளை இழுத்தவளை முறைத்தாள் " அப்டி இருந்தா நீயே கட்டிக்கோடி " என்று கோபமாக கூறினாள்..பின் அவளை மாப்பிள்ளை வீட்டார் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்...அவள் அங்கே வந்தவுடன் அவளின் தந்தை ராஜ் அவளை அந்த மாப்பிள்ளையின் எதிரில் இருக்கும் சோபாவில் அமர வைத்தார்...பின் மாப்பிள்ளையின் தந்தையிடம் திரும்பியவர் " மாப்பிள்ளைக்கு பொண்ண புடுச்சு இருக்கா சம்பந்தி???" என்று அவர் கேட்டது என்னமோ அவரிடம் தான் முந்திக்கொண்டு சொன்னான் அந்த மாப்பிள்ளை " அங்கிள் என்ன இப்டி ஒரு கேள்விய கேட்டுட்டீங்க எனக்கு அனினா அவ்ளோ இஷ்டம் ...❤❤❤❤" இந்த குரல் யாரோடதா இருக்கும்னு நீங்க எல்லாரும் தெரியும்னு நினைக்கிறே ஆமாங்க அது நம்ம அனிஷ் ராகவ் தாங்க...😂😂😂
அப்போது வரை மாப்பிள்ளையை நிமிர்ந்து பார்க்காதள் தன்னவனின் குரல் கேட்ட சந்தொஷத்தில் கண்கள் முழுதும் கண்ணீரோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் .அவளின் உதடுகள் தானாக அவனின் பெயரை முனங்கியது..அவள் இங்கு நடப்பது உண்மைதானா என்று தன்னை கிள்ளி பார்துது கொண்டாள்.. தன்னவளின் செய்கையில் சிரித்துக் கொண்டான்..அனி அவனைப் பார்த்து சிரிப்பாள் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது ஏன்னென்றால் அவள் அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்...' ஐயோ நம்மள என்ன இப்டி முறைக்குறா..' அவளை பார்த்து இழித்து வைத்தான்...
VOCÊ ESTÁ LENDO
Tharame Tharame ❤
Romanceஅன்பு என்றால் என்ன வென்றே தெரியாத நம் நாயகனுக்கு இது தான் அன்பு என்று காட்டுகிறாள் நாயகி 🤩