தாரமே - 34

84 7 0
                                    

காலையில்
அனிதா காலை உணவுக்காக சமைத்து கொண்டு இருந்தபோது அனிஷ் அனிதா விடம் தான் எப்படி அவளை தன்னுடன் சென்னைக்கு வருமாரு கேட்பது என யோசித்து கொண்டு இருந்தான்..

அவன் இப்படி யோசித்து கொண்டு இருக்கையில் ஸ்ருதி அறை தூக்கத்தில் எழுந்து வந்தாள்.. அவளை கண்டதும் அவன் தான் யோசித்து கொண்டு இருந்தவற்றை எல்லாம் மறந்து தன் குட்டி குழந்தையை தூக்கி கொஞ்சினான்..

அனிஷிடம் இட்லிக்கு என்ன சட்னி செய்யட்டும் என்று கேட்பதற்காக அனி வந்தபோது அனிஷ் ஸ்ருதியை கொஞ்சி கொண்டு இருப்பதை பார்த்தாள்.. அவளுக்கு தான் இந்த தந்தையிடம் இருந்து மகளை பிரித்து விட்டோமோ? என மனம் உறுத்தியது..  

மூவரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கையில் அனிஷ் மெதுவாக " அனி நாம் ஏன் நம்ம வீட்டுக்கு மறுபடியும் போகக் கூடாது.. இப்போ தான் எல்லாம் சரி ஆகி விட்டதே. "

தன் பெற்றோர் பேச ஆரம்பித்தவுடன் ஸ்ருதி பெரியவர்கள் பேசட்டும் என்று நினைத்து தன் பொம்மைகளை எடுத்து கொண்டு தோட்டத்திற்குள் சென்று விட்டாள்.. 

அவன் என்ன கூற வருகிறான் என்று புரிந்து கொண்ட அனி எதுவும் கூறாமல் மெளனமாக அமர்ந்திருந்தாள்

அவளுக்கு என்னதான் தன் குடும்பம் முக்கியம் என்றாலும் அவளுக்கு அவளாக இருப்பது தான் பிடித்து இருக்கிறது.. அவள் சென்னை சென்றால் மறுபடியும் அவள் வீட்டை கவனிப்பதற்கே நேரம் சரியாகிவிடும்.. அதுப்போக அவள் மருத்துவமனக்கு செல்லும் போது அங்கு இருப்பவர்கள் எல்லாம் அவளை அனிஷின் மனைவியாக தான் பார்க்கிறார்கள் யாரும் அவளை டாக்டர் அனிதாவாக பார்க்க மாட்டார்கள்.. அது அவளுக்கு பிடிக்கவில்லை.. ஆனால் இங்கு அவள் வேலைக்கு சென்று..தானாக சம்பாதித்து அவள் குழந்தையை பார்த்துக் கொண்டு இருப்பது தான் பிடித்து இருக்கிறது..

ஆனால் இதை அவளால் அவனிடம் கூற முடியவில்லை அதனால் பேச்சை மாற்றும் எண்ணத்தோடு "அனிஷ் எனக்கு எப்படி அங்கிள் தான் எனக்கு அந்த கால்கள் செய்ததது என்று தெரியும்னு உங்களுக்கு தெரிஞ்சுக்க விருப்பம் இல்லையா? "

Tharame Tharame ❤Donde viven las historias. Descúbrelo ahora