அனிஷ் ரிச்சர்டை அழைத்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது
அபிக்கு இன்னும் குற்ற உணர்வு அதிகரித்தது.. அவன் தீர விசாரிக்காமல் தன் தந்தை தான் அனைத்திற்கும் காரணம் என முடிவு செய்து விட்டான்..
அவன் மனதில் ஓடியது எல்லாம் அவனால் எப்படி கீர்த்தியை எதிர் கொள்ள முடியும்?
அண்ணி.. தன் மேல் எவ்வளவு பாசம் கொண்டு இருந்தார்கள் இனி தன்னை மறுபடியும் தன் சொந்த தம்பி போல் நடத்து வார்களா? மாட்டார்களே...
ஸ்ருதி.. தன் சித்தப்பா மீது எவ்வளவு உயிராக இருந்தாள்.. இனி தன்னிடம் மறுபடியும் சித்தப்பா என்று வருவாளா?
இவை எல்லாம் யோசித்து யோசித்து அவனால் அங்கு நிற்க முடியவில்லை அனிஷ் காலை அட்டன்ட் செய்வதற்கு முன் அங்கிருந்து வெளியேறி விட்டான்..
அவன் நினைத்தது எல்லாம் எப்படியாவது அந்த கொடூரமான கனவில் இருந்து வெளியேறுவது தான்..
அவன் மனம் இது கனவாக இருக்காதா என ஏங்கியது..
ஆனால் அவனுக்கு நன்றாக தெரியுமே இது கனவாக இருக்க வாய்ப்பில்லை என்று..
அபி வெளியேறுவதை பார்த்த கீர்த்தி தானும் வெளியே செல்ல நினைத்தாள்..
ஆனால் அவளை தடுத்து நிறுத்திய அஜய் " அவன் சிறிது நேரம் தனியாக இருக்கட்டும் " என்றான்..
அஜய்க்கு அபியின் தந்தை தான் ராஜேஷ் என தெரியவில்லை என்றாலும் அபியின் செயல்பாடுகளை உணர்ந்து கண்டிப்பாக அவனுக்கு வேண்டியவராக தான் இருக்க வேண்டும் என நினைத்தான்.. அதனால் தான் அவன் தனியாக இருக்கட்டும் என கீர்த்தியிடம் கூறினான்..
பின் அஜய் ரிச்சர்டை பார்த்து காலை அட்டன்ட் செய்யுமாறு செய்கை காட்டினான்..
அந்த கால் ஸ்பீக்கரில் போட்டு இருந்தது..
மறுமுனையில்
" ஹலோ ரிச்சர்ட் ஃபிளைட் ஏறிட்டிங்களா? தயவு செய்து இந்தியாவிற்கு கொஞ்ச நாட்கள் வராதீர்கள்.. யாருக்கும் அந்த விபத்தை பற்றி தெரியக்கூடாது.. "

ESTÁS LEYENDO
Tharame Tharame ❤
Romanceஅன்பு என்றால் என்ன வென்றே தெரியாத நம் நாயகனுக்கு இது தான் அன்பு என்று காட்டுகிறாள் நாயகி 🤩