கீர்த்தி அபியை அடிக்க ஆரம்பித்தாள்.. ஆனால் அபியோ அவளை தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை..
பின் என்ன நினைத்தாளோ அடிப்பதை நிறுத்தி விட்டு அவனை இறுக கட்டிக் கொண்டாள்..
அவர்கள் இருவர் முகத்திலும் புன்னகை இருந்ததது..ஆனால் இரண்டும் வித்தியாசமான புன்னகையாக இருந்தது..
கீர்த்தியின் புன்னகை காதல் நிறைந்து இருந்தது..
அபியின் புன்னகையோ தொலைந்து போன பறவை வீடு வந்து சேர்ந்தது போல் இருந்தது..
பின் கீர்த்தி அபியின் விழிகளை நேராக பார்த்து " எப்படி நீ நான் உன்ன விட்டு போவேனு நினைச்ச என்ன நடந்தாலும் உன்ன விட்டு எங்கயும் போக மாட்டேன் அபி.. நீ தான் என்னோட கோபம் சந்தோஷம் காதல் நட்பு எல்லாமே.. நீ எப்படி.. "
என்று அவள் முடிப்பதற்குள் அபி அவளின் இடுப்பை தன்னருகில் இழுத்து அவளின் இதழ்களை சிறை படுத்திக் கொண்டான்..
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீ தானே❤
ஒரு நொடியோ அல்ல ஒரு நிமிடமோ அறியவில்லை அவர்களுக்கு..
அவர்கள் இருவருக்கும் தங்கள் காதலை முன்னமே சொல்லி இருக்கலாம் என தோன்றியது
அவர்கள் உதடுகள் சொல்ல துடித்த காதலை அவர்களின் வீன் பிடிவாதத்தினால் சொல்லாமல் மற்றவர் சொல்வதற்காக காத்திருந்தனர்.. என்ன ஒரு மடத்தனம்
எப்படியோ கடைசியில் சேர்ந்தாகி விட்டார்கள்..
( Author's note : எந்த ஜோடி உங்களுக்கு பிடித்து இருந்தது? அபிகீர்த்தி/ அனிஷ்அனிதா கமன்ட்ஸ்ல சொல்லுங்க )
கேரளாவில்..
அனிஷின் அமைதியற்ற நிலையை பார்த்து கவலையுடன் அனிதா " அனிஷ் என்ன ஆயிற்று? "
அனிதாவை பார்த்ததும் அனிஷ் அவளை அருகில் இழுத்து அணைத்து கொண்டான் அவளின் கழுத்து வளைவில் தன் முகத்தை பதித்து கொண்டான்..
பின் மெதுவாக " அனி நம்ம பிரிவுக்கு காரணம் யாராக இருந்தாலும் என்ன நடந்தாலும் என்ன விட்டு விலகி போயிடாத அனி ஓகே? "
VOCÊ ESTÁ LENDO
Tharame Tharame ❤
Romanceஅன்பு என்றால் என்ன வென்றே தெரியாத நம் நாயகனுக்கு இது தான் அன்பு என்று காட்டுகிறாள் நாயகி 🤩