அனிதாவும் அனிஷூம் நெருங்கிய நண்பர்கள் ஆகினர் அவன் அவளின் படிப்பில் நன்றாக உதவினான்...தன் தந்தையின் ஆசைக்காக டாக்டர் படிக்க ஒத்துக்கொண்ட அவளுக்கு பெரிதாக அதில் விருப்பம் இல்லை... அதனால் அவள் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை ஆனால் அனிஷ் அவளை படிக்க வைத்தான்... அவளுக்கு ப்ராக்டிக்கலாக தன் பேஷன்டன்ட்களை காண்பித்து அவளுக்கு படிக்க உதவினான்...அவனும் தன் மேல் படிப்பிற்காக தன்னை தயார் செய்து கொண்டிருந்தான் அனிதா இப்பொழுது இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது
அனிஷ் அவனின் மேல் படிப்பிற்காக யுஎஸ் செல்ல வேண்டியிருந்தது...தன்னவளிடம் இதை பற்றி கூறுவதற்கு முன் அவளின் கண்களில் தெரியும் குழப்பங்களை தீர்க்க எண்ணினான்வழக்கம் போல் காலேஜ் முடிந்ததும் அனிஷிடம் அன்று நடந்தவற்றை ஒன்று விடாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தாள்... அப்பொழுது அனிஷ் அவளின் கைகளை பிடித்து கொண்டு அவளின் கண்களை பார்த்து" அனி நீ என்னோட காதல வழுக்கட்டாயாமான சூழ்நிலைல ஏத்துக்கலல உன் மனசுக்கு புடிச்சிருக்குல????" என்று கேள்வியாக அவளை பார்த்தான்..
" இல்லவே இல்லை!!!!" என்று சிரித்துக்கொண்டே தலையை இடது புறமாஙக ஆட்டினாள் " அப்றம் ஏன் உன்னோட கண்கள்ள எப்போதுமே ஒரு கலக்கம் இருக்கது..நா கவனிச்சுட்டுதா அனி இருக்கே ப்ளீஸ்டா எனக்கிட்ட உனக்கு என்ன பயம் சொல்லு...உனக்கு என்னய பிடிக்கலையா????"
" சே சே..அப்டிலா இல்ல அனிஷ் எனக்கு நீங்கனா ரொம்ப இஷ்டம்!!!! ஐ ரியலி லைக் யூ அ லாட் !!!!" என்று புன்சிரிப்புடன் கூறினாள். " தென் எதுக்கு அந்த மூணே மூணு மேஜிக்கல் வேர்ட்ஸ் உன்னோட வாய்ல இருந்து வர மாட்டேங்குது????" என்று அவன் கேட்டதும் சிறிது நேரம் அமைதி காத்தவள்..
" எனக்கு பயம் அனிஷ் .. எனக்கு முன்னாடி இருந்தே காதல் மேல நம்பிக்கை இல்ல.. என்னைய பொருத்த வரைக்கும் கல்யாணத்துக்கு அப்பறம் வர காதல்தா உண்மையோனு தோணும்.. அது மட்டுமில்லாம என்னோட அப்பா..அவருக்கு நானா உயிர் அவர்கிட்ட நா எப்டி இத சொல்றதுன்னு தெரியல.. அவருக்கு காதலாம் புடிக்காது அனிஷ் அவருக்கு நா எப்டி சொல்லி புரிய வைப்பே ... அப்றம் இன்னொன்னு இருக்கு அனிஷ் ஆக்ச்சுவலா நா கல்யாணம் பண்ற வரைக்கும் மொரட்டு சிங்கிள்ளா இருக்கும்னு ஆசைப்பட்டே பட்...முடியாதே!!!😉😉😉😉" என்று அவள் கூறி முடித்துவிட்டு திரும்பிய போது அவன் பலத்த யோசனையில் இருந்தான்..' அட நம்மட்ட கேள்வி கேட்டுட்டு யோசிச்சுட்டு இருக்காரா இடியட் ???' என்று மனதுக்குள் பொறுமியவள் அவனின் முதுகில் ஒரு போடு போட்டாள்...பலத்த யோசனையில் இருந்து கலைந்தவன் அவளிடம் திரும்பி " அனி நா சீக்கிரமா கிளம்பனும் நீ சீக்கிரம் வா உன்னய போய் ஹாஸ்டல்ல விட்டுட்டு வரேன்..." என்று கடகடவென கூறியவன் அவளின் பதிலுக்கு காத்திராமல் அவளின் பையை எடுத்துக்கொண்டு அவளின் கரம் பற்றி இழுத்து சென்றான்...அவளை ஹாஸ்டலில் விட்டவன் அவளிடம் ஒரு தலை அசைப்புடன் வேகமாக சென்று விட்டான்...அவள் கடுங் கோபத்தில் இருந்தது பாவம் அவன் அறியவில்லை 😔😔😔😔!!!

أنت تقرأ
Tharame Tharame ❤
عاطفيةஅன்பு என்றால் என்ன வென்றே தெரியாத நம் நாயகனுக்கு இது தான் அன்பு என்று காட்டுகிறாள் நாயகி 🤩