"அங்கிள் உங்க கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் !!!" என்று அவன் கூறிய உடன் அனைவரும் அவனை திரும்பி பார்த்தனர் ..." நிச்சயதார்த்தம் முடிஞ்சு 1 வீக்ல நா யு.எஸ் கிளம்பனும் ...என்னோட பிஜி கோர்ஸ்க்காக..இத நா அனிக்கிட்டக்கூட சொல்லல என்னோட கோர்ஸ் ஒரு 3 இயர்ஸ் இருக்கும் அங்கிள்..அனியும் அவளோட யுஜி முடிக்கட்டுமே.." என்று கூறினான்..அனியின் தந்தைக்கோ இப்பொழுதுதான் நிம்மதியாக இருந்தது.." நாக்கூட அனி இன்னும் சின்ன பொண்ணுதான அதுக்குள்ள எதுக்கு கல்யாணம்ன்னு யோசிச்சே மாப்ள இப்போ நீங்க எடுத்து இருக்க முடிவிற்கு நா சம்மதிக்கிறே..அனி உனக்கு இதுல எதுவும் பிரச்சினை இல்லையே..???" என்று அனிஷிடம் ஆரம்பித்து அனியிடம் முடிக்க அவளோ தன்னவன் தன்னை விட்டு தூரம் செல்கிறான் என்ற அதிர்ச்சியில் இருந்து மீண்டவளாக " பராவாயில்லபா அவரு படிச்சு முடிச்சதுக்கு அப்றமே கல்யாணம் பண்ணிக்கிறோம் !!!" என்று தன் மனதை மறைத்து இன்முகமாக கூறினாள்..பின் அவர்களின் நிச்சயதார்த்த சுபநிகழ்ச்சி இனிதே ஆரம்பித்தது..பெரியோர்கள் முன்னிலையில் நிச்சய பத்திரிகை வாசிக்க பட்டது..அனைவரும் நிச்சயம் முடிந்ததும் தங்கள் வாழ்த்தினை தெரிவித்தனர்..அனிஷ் அனைவர் முன்னிலையிலும் தன் அனியின் விரலில் வைர மோதிரத்தை அணிவித்தான்..அதில் ஆங்கில 'எ' எழுத்து ஒன்றோடொன்று பின்னி இருந்தது..அது பார்க்கவே மிக அழகாக இருந்தது..வைர கற்கள் விளக்கொளியில் மின்னியது..
தன்னவளின் விரலில் அணிவித்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் ' ஐ லவ் யூ ' என்று கூறினான் ...ஆனால் அவளோ ' டைம் இல்ல டைம் இல்ல..' என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.. பின் அந்த நிச்சயதார்த்த சுபநிகழ்ச்சி மிகவும் இன்பமாக கழிந்தது... நாட்கள் எப்படி நகர்ந்தது என்றே தெரியவில்லை ஒரு வாரம் முடிந்துவிட்டது அனிஷ் வெளிநாட்டிற்கு கிளம்புவதற்கான நேரம் வந்துவிட்டது ...என்னதான் அவள் சரி என்று கூறினாலும் அவளுக்கு அனிஷை பிரிவது மிகவும் வருத்தமாக இருந்தது...
அவள் ஒரு வாரமாக அனிஷிடம் கேட்கும் கேள்வி " நீங்க எப்போ திரும்பி வருவிங்க?? எந்த லீவு இருந்தாலும் வந்துட்டீங்களா?? ப்ளீஸ் ...சீக்கிரம் வந்துடுங்க!!! கண்டிப்பா போய்தா ஆகணுமா ??எனக்கு கஷ்டமா இருக்கு ப்ளீஸ் போகாதீங்க.. என்று மாறிமாறி இதையே கூறிக் கொண்டிருந்தாள் அவனும் பொறுமையாக " சீக்கிரம் வந்துடுவே ...எந்த லீவு கிடைச்சாலும் ஓடி வந்து விடுவேன்... உனக்கு டெய்லி வீடியோ கால் பண்றேன் இல்ல கால் பண்றேன் ....எனக்கும் உன்ன பிரிஞ்சு கிளம்புவது ரொம்ப ரொம்ப கஷ்டமா தான் இருக்கு ...ஆனாலும் என் அனிக்கு அவளுக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்குனும் இல்லையா அது என்னோட கடமை இல்லையா!!!" இதையே அவனும் ஒரு வாரமாக கூறிக்கொண்டே இருந்தான்..

ESTÁS LEYENDO
Tharame Tharame ❤
Romanceஅன்பு என்றால் என்ன வென்றே தெரியாத நம் நாயகனுக்கு இது தான் அன்பு என்று காட்டுகிறாள் நாயகி 🤩