இதுவரை..
அனிஷூம் அனிதாவும் பிரிந்து இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் சேரப்போவதாக நினைக்கிறார்கள்...அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க கீர்த்தி, அனிதாவின் தங்கை..அவர்கள் இருவரையும் பிரித்த அந்த மர்ம பெண் யார் என்று கண்டுபிடிக்க போவதாக சபதம் எடுக்கிறாள்..
இனி..
காலை கதிர்கள் முகத்தில் அடிக்க..தூக்கத்தில் இருந்து விழித்த கீர்த்தி பஸ் ஜன்னல் திரையை விலக்கி பார்த்தாள்..
பரபரப்பான சென்னை மாநகராட்சி உள்ளே பஸ் நுழைந்தது தெரிந்தது..வேகமாக எழுந்தவள் பஸ் நின்றதும் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்...
தான் தங்கியிருந்த மகளிர் விடுதிக்குள் நுழைந்தவள்..தன்னை ஓடி வந்து அணைத்து கொண்ட அந்த குட்டி குழந்தை வந்து அணைத்து கொண்டது..அந்த குழந்தை அங்கே வேலை செய்யும் ஒரு பெண்ணின் குழந்தை..
சில ஆண்டுகளுக்கு முன்...
கீர்த்தி தன் தோழிகளுடன் கடற்கரை சென்ற போது..அங்கே ஒரு இளம்பெண் கடலில் குதித்து தற்கொலை முயற்சி செய்வதை பார்த்து..அப்பெண்ணை காப்பாற்றி
விசாரித்ததில் இளம் வயதில் காதலித்து கர்ப்பமான பின்..காதலனால் கைவிடப்பட்டவள்..தன் பெற்றோரிடம் கூற பயந்துபோய் தற்கொலை முயற்சி செய்தாள்...அவளை சமாதானம் செய்து அப்பெண்ணின் வீட்டில் பேசி பார்த்த போது..அப்படிப்பட்ட பெண் தனக்கு வேண்டாம்..என்று கைவிட்டனர்..
அதனால் தன் தோழிகளுடன் சேர்ந்து அவளுக்கு அடைக்கலம் கொடுத்து..அவளுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்ததும்..கீர்த்தி தங்கி இருக்கும் மகளிர் விடுதியிலேயே அவளுக்கு வேலையும் வாங்கி கொடுத்தாள்...
தன்னை அணைத்து கொண்ட குழந்தையை தூக்கி கொஞ்சி விட்டு..தன் அறைக்குள் நுழைந்தவள்..சிறிது நேரம் உறங்கி விட்டு எழுந்து கிளம்பினாள்...கிளம்பிக் கொண்டு இருந்த போதே..அனிஷின் தம்பி அபிக்கு கால் செய்தாள்...
ŞİMDİ OKUDUĞUN
Tharame Tharame ❤
Romantizmஅன்பு என்றால் என்ன வென்றே தெரியாத நம் நாயகனுக்கு இது தான் அன்பு என்று காட்டுகிறாள் நாயகி 🤩