தாரம் -14❤❤

591 49 39
                                    

அவர்கள் தாங்கள் பிரிந்த இருந்தபோது அணுபவித்த சோகங்களை பகிர்ந்து கொண்டனர்..கொஞ்ச நாழிதான் பின் அவர்களுக்குள் எப்பவும் போல் செல்ல சண்டைகள் ஆரம்பித்தது...அனிஷ் எப்பவும் போல் தன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல் அவளிடம் எதையாவது கூறி வாங்கி கட்டி கொண்டான்..நன்றாக தான் இருவரும் பேசி கொண்டு இருந்தனர்.. திடீரென்று அனி " ஆமா அனிஷ்..உங்க கோர்ஸ் 3 இயர்ஸ்னு சொன்னீங்க ஆனா 2 இயர்ஸ்ல வந்துட்டீங்க ளே ..???" என்று உங்கள் எல்லாருடைய சந்தேகத்தையும் தீர்த்து வைக்கும் நோக்கத்தோடு கேட்டாள்.." அதுவா அனிமா என்னோட ஆக்ச்சுவல் கோர்ஸ் 2 இயர்ஸ்தா பட் 1 இயர் அங்க ப்ராக்டீஸ் பண்ணணும்னு நினைத்தேன்..என்னோட ஃபைனல் மார்க்ஸ் நல்லா இருந்ததுனால எனக்கு இரண்டு சாய்ஸ் குடுத்தாங்க ஒன்னு இங்க வேலை செய்யணும் இல்லன்னா யு.எஸ்ல பிரக்டிஸ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னாங்க எனக்கும் என்னோட அனில்க்குட்டிய பாக்காம இருக்க முடியலயா சோ கிளம்பி ஓடி வந்துட்டே .... " என்று அவன் கூறி முடித்ததும் அவனைப் பார்த்து " உங்களுக்கு என்மேல அவ்ளோ அன்பு இருக்கா அனிஷ் என்னால அந்தளவுக்கு அன்ப திரும்பி குடுக்க முடியுமா ??? என‌க்கு பயமா இருக்குடா !!!" அவளை இடையோடு அணைத்து கொண்டான்..அவனின் இறுகிய அணைப்பில் அவனின் மார்பில் புதைந்து போனாள்... அவளின் தலையில் முத்தமிட்டவன்.." அனிம்மா உனக்கிட்ட நா ஒண்ணு சொல்லவா..எனக்கு உன்ன எதுக்கு புடிச்சுருக்குன்னே தெரியலடி ...சில விஷயங்கள் நமக்கு அவ்ளோ பிடிக்கும் ஆனா ஏன்னு தெரியாது...அது மாதிரி தான் நீ..இப்பவும் சொல்றே எப்பவும் சொல்லுவேன்டி உன்னளவு இந்த உலகத்துல யாராலையும் அன்பு காட்ட முடியாதுடி..!!!" என்று அவன் கூறியதும் எம்பி அவன் தாடையில் இதழ் பதித்தவள்.." உங்ககிட்ட ஒன்னு கேக்கவா..எனக்கு எப்பவுமே சுயமரியாதைதா பெருசுன்னு நினைப்பே..அதுவும் இல்லாமா எனக்கு ஈகோ ரொம்ப அதிகம்...பட் உங்ககிட்ட மட்டும் என்னால காமிக்க முடியல ஏன்??? " " ஏன்னா உனக்கு என்ன ரொம்ப பிடிச்சிருக்கு  அதனாலதான் ...யூ ஆர் இன் லவ் வித் மீ.." " அப்டியா ??? எனக்கு ஒன்னும் அப்டி தெரியலயே.. என்று உதட்டை பிதுக்கி அழகு காட்டியவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டான் அவளின் அனிஷ் 💞💞
இருவரும் இவ்வுலகில் இல்லை அவர்களை உலகிலிருந்து அழைத்து வந்தது மோனியின் குரலில்தான்  " ஹலோ மாமா உள்ள என்ன பண்ணிட்டு இருக்கீங்க ???" இவவேற !!" என்று அவளும் "ஐயோ வந்து ரொம்ப நேரமாயிடுச்சு  மாட்டிக்கிட்டேயேடா சேகரு‌‌..!!' என்று அவனும் அழுத்துக்கொண்டு  பிரிந்தனர்..அனி போய் கதவை திறந்தவள் " ஏன்டி எப்பபாரு டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்க ???" என்று கடித்துக்கொண்டாள்.." அம்மா தாயே அனிதா ..உங்கள் தாய்தான் தங்களை  அழைத்து வர கூறினார்கள் சகோதரியே ...!" என்று நாடக ஸ்லேங்கலில் கூறியதும் சிரித்து விட்டாள் மோனியின் செல்ல அக்கா...

Tharame Tharame ❤Donde viven las historias. Descúbrelo ahora