செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூரு மொழிகளில் வார்த்தை இல்லைஇவ்வரிகள் அனைத்தும் ஒரு பெண்ணிற்கு தன் அப்பா எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தும்...
அம்மாவை போல் அன்பைக் காட்ட யாராலும் முடியும் ஆனால் அப்பாவை போல் தன் கடமையை நிறைவேற்ற உலகில் யாரும் இல்லை...தன் மகளை இரண்டு வருடங்கள் கழித்து பார்க்கிறோம் என்ற உணர்வே அவனுக்கு மகிழ்வித்தது...அதே சமயம் தன் தந்தையை இரண்டு வருடங்கள் கழித்து பார்க்கிறாள் ஸ்ருதி..அவளுக்கு அது கனவா??நினவா??என்றே குழப்பமாக இருந்தது..தன் அப்பாவிற்கு நிஜமாகவே தன் மேல் கோபம் இல்லை என்று மகிழ்ச்சி அடைந்தாள்..அங்கே அனிதாவோ அவனை கண்டு அவள் அதிசயிக்கவில்லை அவளுக்கு தெரியும் அவன் கண்டிப்பாக வருவான் ஆனால் இவ்வளவு சீக்கிரம் என்று தெரியவில்லை...
அந்த இடத்தில் மூன்று பேரும் மூன்று விதமான உணர்வுகளுடன் இருந்தனர்.. முதலில் உலகிற்கு வந்தவள் அனிதா அனிஷின் செல்ல மகள் ஸ்ருதி..தன் தந்தையை நோக்கி ஓடி சென்று கட்டிக்கொண்டாள்...அந்த அப்பா-மகள் உறவை கலைத்து விட விரும்பாதவளாக அனிதா..உள்ளே சென்று விட்டாள்..ஸ்ருதி தன் தந்தையை நோக்கி " அப்பா..இனிமே ஸ்ருதிய விட்டு போக மாட்டீங்கள??..ப்ராமிஸ்??" என்று தன் மழலை குரலில் கேட்டதிற்கு அனிஷ் சிரித்து கொண்டே பின்கி பிராமிஸ் செய்தான்..பின் தந்தையும் மகளும் இரண்டு வருடங்கள் பிரிந்து இருந்ததற்கு எல்லாம் சேர்த்து ஆட்டம் போட்டார்கள்..சிறிது நேரத்திற்குள் அங்கே அனிதா ஸ்ருதிக்கு பாலும் அனிஷிற்கும் தனக்கும் ஜூஸ் எடுத்து கொண்டு வந்தாள்...ஜூஸை பார்த்ததும் ஸ்ருதிக்கு பால் பிடிக்காமல் போய் விட்டது.." அம்மா எனக்கும் ஜூஸ்..ப்ளீஸ்" என்று அடம் பண்ண ஆரம்பித்தாள்..அனி " நோ நோ..முடியவே முடியாது..!!" என்று அரட்டினாள்..முன்னாடி என்றால் ஸ்ருதி ஒரு அரட்டலில் அம்மா பேச்சை கேட்டு பாலை குடித்து இருப்பாள்..ஆனால் இப்போது தான் அப்பா இருக்கிறாரே..அதனால் அடம் அதிகரித்தது.. சமாளிக்க முடியாமல் அனிஷை பார்த்து முழித்தாள் அனிதா..

KAMU SEDANG MEMBACA
Tharame Tharame ❤
Romansaஅன்பு என்றால் என்ன வென்றே தெரியாத நம் நாயகனுக்கு இது தான் அன்பு என்று காட்டுகிறாள் நாயகி 🤩