தாரமே - 26

105 7 3
                                    

சிலர் நம் வாழ்வில் நம்மால் மன்னிக்க முடியாத தவறு செய்திருந்தாலும்... அவர்கள் நம் ரத்த உறவுகளாக இருந்தால்.. ஆயினும் அவர்கள் மேல் நமக்கு கோபம் இருந்தாலும் மற்றவர்கள் நம்மால் அவர்களை தண்டிக்க  நினைக்கும் போது அவர்களை காப்பாற்றவே மனம் சொல்லும்..

அனிஷ் அபிக்கு கால் செய்தான்..
மறுமுனையில் எடுத்தவுடன் " அபி லிசன்.. கீர்த்திய எப்படியாவது இந்த விஷயத்துல இருந்து டிஷ்ட்ராக்ட் பண்ணு.. இந்த விஷயத்துல அவ எவ்வளவு இன்வால்வ் ஆகிறாளோ அவ்வளவு ஆபத்து அவளுக்கு.. ப்ளீஸ் நான் சொல்றத கேளு... "

மறுமுனையில் இருந்த அபிக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.. அனிஷ் ஏன் விசாரணையை தடுக்கனும் ? அவருக்காக தான நம்ம கஷ்டபடுறோம்? கோபமான அபி

" அண்ணா உங்களுக்காக தான் நாங்க இங்க கஷ்டபடுறோம்.. உங்களுக்கு பயமா இருந்தால் அமைதியாக இருங்க.. கீர்த்திய பத்தி நீங்க கவலைபடாதீங்க நான் பாத்துகிறேன்..
என்று கூறிவிட்டு காலை கட் செய்தான்...

மறுமுனையில் அனிஷ் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான்..

அபியின் அமைதியை கவனித்த கீர்த்தி என்னவென்று கேட்டாள்.. ஆனால் அவன் எதுவும் கூறாமல் அவளை நோக்கி புன்னகையுடன் ஒன்றும் இல்லை என்று தலை அசைத்தான்..

ஆயினும் அபி ஒன்றும் இல்லை என்றாலும்அவன் ஏதோ மறுக்கிறான் என்பதை உணர்ந்த கீர்த்தி என்னவென்று கேட்க மறுபடியும் அவனை கூப்பிடலாம் என பார்த்தால் அதற்குள் அவர்கள் கார் ஒரு வீட்டிற்கு முன் வந்து நின்றது..

மூவரும் அந்த வீட்டின் வெளியே நின்றனர்.. அழைப்பு மணியை அழுத்தினாள் கீர்த்தி..

ஆனால் கால் மணி நேரம் ஆகியும் எந்த பதிலும் இல்லை.. கடுப்பான அபி அழைப்பு மணியை அழுத்திக் கொண்டே இருந்தான்..

சத்தம் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பாட்டி வெளியே வந்தார்.. அபியை பார்த்து முறைத்த அந்த பாட்டி.. " அந்த வீட்டில் இருக்கவங்க இன்னைக்கு காலைல கிளம்பி வெகேஷன் போயிட்டாங்க.. அதனால  நீங்க எல்லாரும் கொஞ்சம் இடத்தை காலி பண்ணுங்க.. முக்கியமாக நீ.. " என்று அபியை நோக்கி கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்...

Tharame Tharame ❤Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin