அனிஷ் எழுந்த போது அவன் மருத்துவமனயில் இருந்தான்..
அவன் எழ முயன்ற போது அவன் தலையில் பயங்கரமாக வலித்தது..
அவன் கைகள் இரண்டிலும் வென்ஃப்ளான் போடப் பட்டிருந்தது..
அவன் தன் கண்களை மூடி என்ன நடந்தது என்று ஞாபக படுத்த முயன்றான்.. எல்லாம் தெளிவாக இல்லாமல் இருந்தது..
பின் சிறிது நேரம் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகம் வந்தது..
அனிதாவின் ஃபோன் கால்களுக்கு பின் இருக்கும் நபர் தன் தந்தை என்பது ஞாபகம் வந்தது.. அவன் கண்களில் கண்ணீர் நிரம்பியது..
அவன் தந்தையாக எப்படி இருக்க முடியும்?
அப்போது ரூமின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பினான்..
அங்கே ஒரு நடுத்தர வயதில் ஒரு மனிதர் வெள்ளை கோட் அணிந்து உள்ளே நுழைந்தார்... அவர் கையில் ஒரு அட்டையும் அதில் நிறைய பேப்பர் களும் இருந்தது..
அந்த ட்யூடி டாக்டர் அனிஷ் எழுந்து விட்டதை பார்த்து அருகில் வந்தார்..
பின் மெதுவாக தன் கோட் பாக்கெட்டில் இருந்த டார்ச் லைட்டை எடுத்தவாரு " அனிஷ் இப்போ எப்படி இருக்கீங்க ? "
" ஐ யம் ஃபைன் டாக்டர் "
" உடம்பில் எங்காவது வலிக்கிறதா?"
" தலை தான் பயங்கரமாக வலிக்கிறது "
பின் அந்த டாக்டர் சில கேள்விகள் கேட்டு கொண்டே ஜெனரல் எஃஸாமினேஷன் செய்தார்..
" நான் எவ்ளோ நாளாக அன்கான்ஸியஸா இருந்தேன்? "
" ஒரு 36 மணிநேரமாக அனிஷ் "
" என்னோட ஃபாமிலி எங்க இருக்காங்க? "
" உங்க அப்பாவும் சித்தப்பாவும் வெளியே இருக்காங்க .. உங்க அப்பா நீங்க எழுந்திருக்க வரைக்கும் எதுவுமே சாப்பிடாமல் இருக்கிறார்.. "
இதை கேட்டதும் அனிஷின் உதட்டில் கசப்பான புன்னகை பூத்தது..
அனிஷ் அவரிடம் தன் மனைவி எங்கே என்று கேட்க நினைத்தான்.. ஆனால் தன் மனைவியை பற்றி பிறரிடம் கேட்க விரும்பவில்லை சித்தி வந்ததும் அவரிடம் கேட்டு கொள்ளலாம் என நினைத்து கொண்டான்..
ESTÁS LEYENDO
Tharame Tharame ❤
Romanceஅன்பு என்றால் என்ன வென்றே தெரியாத நம் நாயகனுக்கு இது தான் அன்பு என்று காட்டுகிறாள் நாயகி 🤩