அன்று கார்த்திக் ஹோச்பிடலில் இருந்து வீட்டிற்கு திரும்பியது போது வீட்டில் யாரோ பொருட்களை தூக்கி எறியும் சத்தம் கேட்டது
வீட்டில் இப்போது அத்தை இல்லை என்பதால் கண்டிப்பாக மகதியாக தான் இருக்கும் அவள்தான் என்பதை நினைத்தே அவனுக்கு பயத்தால் மனம் படபடத்தது
அதனால் வேகமாக மாடியை நோக்கி ஓடினான்
அங்கே மகதி கையில் கிடைப்பதை எல்லாம் தூக்கி போட்டு உடைத்து கொண்டு இருந்தாள்
வேகமாக சென்றவன் அவளை தடுத்து நிறுத்த முயன்றான் ஆனால் அவன் மேலயும் சில பொருட்கள் வந்து விழுந்தது
மகதி அப்போது பார்க்க பைத்தியம் பிடித்தவள் போல் இருந்தாள்
ரொம்ப சிரமப்பட்டு அவளிடம் இருக்கும் பொருட்களை வாங்கி தூர வீசி அவளை அமைதி படுத்தினான் கார்த்திக்
அவள் நன்றாக அமைதி ஆனதிற்கு பின் மெதுவாக என்ன ஆயிற்று என்று வினவினான்
அவனை சிறிது நேரம் முறைத்தவள் பின் மெதுவாக " அனிஷிற்கு கல்யாணமாகி குழந்தை இருக்கும் விஷயத்தை ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல "
அந்த கேள்வியை கேட்டவுடன் அவனுக்கு தூக்கி வாரி போட்டது இவளுக்கு எப்படி தெரிந்தது
பயத்தை விட அவனுக்கு கோபம் தான் அதிகம் ஆகியது எவ்வளவு தான் அவனும் பொறுத்து கொள்வான் அவனுக்கும் எமோஷன்ஸ் என்று இருக்கிறது இல்லையா?
அதனால் கோபத்தை அடக்கிய குரலில் " அவனப்பத்தி உன்கிட்ட சொல்ற அளவுக்கு அவசியம் என்னக்கு தெர்ல அதா சொல்லல ஏன் அதுல உனக்கு ஏதாச்சும் பிரச்னை இருக்குதா ?"
அவனின் கோப குரலை கேட்ட போது அவளுக்கு உள்ளே பயமாக இருந்த போதும் தவறு அவன் மேல்தான் என்று அவளுக்கு தோன்றியது அதனால் அவளுக்கு இருக்கும் கோபத்தை விட இன்னும் கோபம் அதிகம் ஆனது
அதனால் கோபத்தால் கண்களில் கண்ணீருடன் " எனக்கு அனிஷ் வேணும்னு நா எவ்ளோ தடவ சொல்லிருக்கே நீ ஏன் அவன கல்யாணம் செய்ய விட்ட ?"
மகதி கூறியதை கேட்டு கார்த்திக்கிற்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை
சிரிப்பது அழுவதை விட அவள் இன்னும் இவ்வளவு சின்ன குழந்தையாக இருக்கிறாளே என்ற கவலை தான் அதிகமா இருந்தது அவனிற்கு
வாழ்க்கையில் ஒருவருக்கு தான் செய்தது தவறு என்று தெரிந்து இருந்தால் அவரை தண்டிப்பதில் குற்றம் இல்லை ஏன் நம் சட்டத்திலேயே அப்படி தானே உள்ளது குற்றவாளி தான் செய்தது தவறு என்று ஒப்பு கொண்ட பின்தானே அவரை நீதிபதி தண்டிக்கிறார் ஆனால் தான் செய்தது தவறு எனறு அறியாமல் இருப்பவரிடம் என்ன தண்டித்து என்ன பிரயோஜனம் ? அவருக்கு நம் மேல் இன்னும் கோபம் அதிகரிக்கத்தான் செய்யும்
அதனால் தன் பொறுமையை எல்லாம் இழுத்து பிடித்த குரலில் " அனிஷ் காதலிப்பதும் கல்யாணம் கட்டி கொல்றதும் அவனோட இஷ்டம் அத நா டிசைட் பண்ண முடியாது ஆனா ஒரு வேல எனக்கு அந்த வாய்ப்பு இருந்தாலும் நா அவனுக்கு பிடிச்ச காதலிக்கிற பொண்ணதா கல்யாணம் பண்ணி வைப்பேன் " என்றான் அதிலும் அந்த அவனுக்கு பிடித்த காதலிக்கும் பெண் என்பதை அழுத்தமாக கூறினான்
அவன் கூறுவதை எல்லாம் கேட்டு கொண்டிருந்தவளுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது ஏன் அவள் ஒன்றும் அனிஷ் காதலிப்பதற்கு தகுதி இல்லாதவள் இல்லையே ? ஏன் அவளும் தானே ஒருவனை காதலித்தாள் ஆனால் அவள் காதல் ஏன் ஜெயிக்கவில்லை ? உலகம் ஏன் இப்படி ஒருவருக்கு ஒரு மாதிரியும் இன்னொருவருக்கு இன்னொரு மாதிரியும் இருக்கிறது ? அவளும் தான் காதலித்தாள் ஆனால் அவள் காதல் அவளுக்கு கிடைக்கவில்லை ஆனால் அதே காதலை தான் இன்னொரு பெண்ணும் செய்தாள் ஆனால் அவளுக்கு கிடைத்து விட்டதே எப்படி ?
ஆனால் இவ்வளவு யோசித்த அவள் காதல் என்பது செயல் அல்ல அது ஒரு உணர்வு ! அதை யாராலும் கட்டாய படுத்த முடியாது என்பதை புரிந்து கொள்ள மறந்து விட்டாள்
அமைதியாக இருந்த மகதி சிறிது நேரம் கழித்து உறுதியான குரலில் " எனக்கு என்ன வேணுமோ அது என்னக்கு கிடைச்சே ஆகணும் அது என்னக்கு இல்லனா யாருக்கும் இல்ல !" என்று கூறிவிட்டு விறு விறு என்று வாசல் நோக்கி சென்றாள்
தன் அண்ணனை நோக்கி திரும்பியவள் " நா என்னோட பிரின்ட் வீட்ல தங்க போறே சோ என்ன தேடுற வேலையெல்லாம் வச்சுக்காத அண்ணா " என்று கூறிவிட்டு சென்று விட்டாள்
அவள் சற்று முன்பு கூறியதை நம்பமாட்டாமல் அயர்ந்து போய் அமர்ந்து இருந்தான் கார்த்திக்

VOCÊ ESTÁ LENDO
Tharame Tharame ❤
Romanceஅன்பு என்றால் என்ன வென்றே தெரியாத நம் நாயகனுக்கு இது தான் அன்பு என்று காட்டுகிறாள் நாயகி 🤩