ஆயிரம் பேர் கூடி இருக்கும் மண்டபத்தில் இவள் கத்தும் சத்தம் தனியாக கேட்டது..!!!
இவளின் கத்தலுக்கு காரணமானவனோ அவளையே இமைக்காது இல்லை, விழுங்குவது போல் பார்த்து கொண்டு இருந்தான்...
"அம்மா என்னால இவனை கல்யாணம் பண்ணிக்க முடியாது மா..இருபத்திரண்டு வயசுலயே கல்யாணம் பண்ண தெரியுது ..இப்பவே ஒரு பொண்ணை லவ் பண்ணி அந்த பொண்ண ச்சி சொல்லவே வாய் கூசுது.. என்னலை முடியாது மா இவனை கல்யாணம் பண்ண!!.." என சத்தம் போட்டு பேசியவளை பார்த்தவன்
"அடியே ரொம்ப ஸீன் போடற...தாலியை கட்டிட்டு அப்பறம் இருக்கு டி உனக்கு...உன் இலை, தலை எல்லாத்தையும் உடைச்சு வைக்கற" என மனதில் அவளை அர்ச்சனை செய்தபடி அவன் இருக்க..
"நான் பாங்கிணாத்துல விழுந்து செத்து போனாலும் போவனே தவிர இவனை கல்யாணம் பண்ண முடியாது மா.. "
"நீ மட்டும் கிணாத்தில் விழுந்தா மொத்த தண்ணிலையும் பாயிசன் கலந்த மாதிரி டி குந்தாணி..யோ சீக்கரம் பேசி கல்யாணத்தை பண்ணுங்க டா எவ்ளோ நேரம் இவ பேசறது கேட்கறது...'
'இப்போ நீ ஒத்துக்காமா இருந்தன்னா இந்த நிமிஷம் என்னை என்ன பண்ணுவனு தெரியாது. போ டி மணமேடையில் உட்காரு போ" என அவளின் தாய் கூற...
"அட்றா சக்கை அட்றா சக்கை செமையா பேசற அக்கா.. தாலிக் கட்டிட்டு வந்து உனக்கு உம்மாவே தர.."
என அவன் மனதில் நினைக்க...
"ஏன் மா ஏன் இப்படி பண்ற இது என்னோட வாழ்க்கை மா ... நீ என்கூட வந்து வாழ மாட்ட மா நான் தான் வாழனு பிளீஸ் மா.. இந்த ஒரே ஒரு முடிவை மட்டும் நான் எடுக்கற மா, என்னோட படிப்பை கூட நீயும் இங்க நிக்காறாரே, உன் சித்தப்பா இவரும் தான மா எடுத்திங்க பிளீஸ் மா என்னால உன் தம்பியைக் கல்யாணம் பண்ண முடியாது மா..." என கெஞ்ச
"ஜஸ்ட் பாஸ் மட்டும் ஆனா இதுக்கு பாரேன் எவ்ளோ ஸீன்னு.. மக்களே நம்பாதிங்க.. பொய் பொய்யா சொல்ற"