சுடர் - 11

1.9K 68 5
                                    

கருநீல நிற ஃபேன்ஸி புடவையில் ஆங்காங்கே வைரக் கற்கள் பதித்தது போல் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. புடவையை நேர்த்தியாக அவளுக்கு அணிவித்து இருந்தனர் அழகு கலை நிபுணர்கள்.

சிகையலங்காரம் முடித்து முகத்தையும் அலங்காரித்த பின் அவள் முகத்தை அவளுக்கு கண்ணாடியில் காண்பித்தார்கள், அவள் விழிகள் விரிந்தன, அவள் தானா அது என்ற சந்தேகத்தில் முகத்தை ஒருமுறை தொட்டு பார்த்து கொண்டாள்.

"அலங்காரம் முடிந்ததா?" கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்த மகேஷ்வரி இளமதியின் மதி மயக்கும் அழகிய முகத்தை பார்த்து வாயடைத்து போய் நின்றார்.

"அம்மாடி! எவ்வளவு அழகா இருக்க!" என்று கூறி அவள் அருகில் சென்று அவள் நெற்றியில் முத்தமிட்டார். இளமதி முகம் சிவந்தது. அவள் புன்னகையுடன் தலையை குனிந்து கொண்டாள்.

"இன்னும் அரைமணி நேரத்திற்கு அப்புறம் நீ மேடைக்கு வரனும் மா. அது வரை கொஞ்சம் உக்காந்து ஓய்வெடுத்துக்கோ" பாசமாக கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

இளமதி மீண்டும் ஒருமுறை அவள் முகத்தை கண்ணாடியில் பார்த்தாள், அவளின் கடந்த காலத்தை பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளால்.

அவளுக்கு புத்தாடை என்ற ஒன்றை அவள் அத்தை எடுத்துக் கொடுத்ததே இல்லை. அவள் மாமாவையும் அதற்கு அனுமதித்தது இல்லை. பள்ளி படிப்பு முடியும் வரை, அவள் வெளுத்து போன ஆடைகளையே அணிந்திருக்கிறாள்.

அவள் பள்ளி சீருடை மட்டுமே கொஞ்சம் நேர்த்தியாக இருக்கும். அதுவும் இலவசமாக பள்ளியில் கொடுப்பதால் சில சமயம் அவளுக்கு பெரியதாக இருக்கும். அவள் அதை பற்றி எல்லாம் ஒரு போதும் கவலைப் பட்டதே இல்லை, அவளை அழகு படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணியதும் இல்லை.

அவள் கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் ஓரளவுக்கு நல்ல உடைகளை உடுத்தி இருக்கிறாள். அதுவும் மிகவும் சாதாரண உடைகள், தற்போது அவள் உடுத்தி இருக்கும் புடவையின் விலை, அவள் அதுவரை அவள் உடைமைகளுக்காக செலவு செய்திருந்ததை விட பல் மடங்கு அதிகமாக இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now