சுடர் - 15

1.9K 71 9
                                    

சில நாட்கள் அவ்வாறே சென்றன. இளமதி கல்லூரிக்கு சென்று வந்ததால் அவள் மனம் நிம்மதியாக இருந்தது.

அன்று மதியம் ஏதோ சில கோப்புகளை எடுத்து வர பரிதி அவன் வீட்டுக்கு வந்தான். சில கோப்புகளை புரட்டி பார்த்து கொண்டு இருந்த பொழுது காற்றடித்ததில் சில பறந்து சென்று கீழே விழுந்தன. அவன் கோபமாக அதை எடுக்க சென்றான்.

அதில் ஒரு தாள் வேகமாக பறந்து சென்று இளமதியின் அறை கதவின் இடுக்கில் சிக்கி நின்றது. அவன் அவள் அறை அருகில் சென்றான். அதை திறக்கலாமா வேண்டாமா என்று அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால் அது மிகவும் முக்கியமானது என்பதால் அதை எடுத்து விடலாம் என்று எண்ணி அதன் அருகில் சென்றான். கதவை திறந்தாள் தான் அதை கிழியாமல் எடுக்க முடியும். எனவே வேறு சிந்தனை இன்றி கதவை திறந்தான்.

அந்த காகிதம் அவன் கைகளுக்கு கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தவன் விழிகள் விரிந்தன. அவள் அறை முழுவதும் ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன.

"இவளுக்கு ஓவியம் எல்லாம் வரைய தெரியுமா?" என்று மனதில் எண்ணிக் கொண்டு உள்ளே நுழைந்தான். அதில் ஒரு ஓவியம் அவன் மனதை மயக்கியது.

ஆற்றங்கரை ஓரமாக மயில் இறகால் ஆன ஊஞ்சலில் ஒரு பெண் ஆடிக் கொண்டு இருப்பது போல் இருந்த ஓவியத்தை பார்த்து மெய் மறந்து நின்று விட்டான்.

அதன் அழகையும், நேர்த்தியாக அவள் வடிவமைத்திருந்ததையும் பார்த்து அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அவன் கைபேசியில் அதை படம் பிடித்துக் கொண்டான். அவன் அவ்வாறு அவள் அறையை அவளின் அனுமதி இல்லாமல் படம் பிடிக்க கூடாது என்று அவன் மனம் அவனுக்கு உரைத்த போதிலும் அவன் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அங்கிருந்த ஓவியங்களை படம் பிடித்தான்.

அதுமட்டுமின்றி அந்த அறையில் ஜன்னல் ஓரத்தில் ஒரு சிறிய தட்டில் தானியங்களும், ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீரும் வைக்க பட்டு இருந்தது. இது எதற்காக? என்று எண்ணி கொண்டு அதன் அருகில் வந்தவன், அந்த ஜன்னலின் வெளியே சிட்டு குருவி கூடு கட்டி வாழ்ந்து கொண்டு இருந்ததை பார்த்து புன்னகைத்தான்.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now