இரவில் உறக்கம் வராமல் பால்கனியில் நடந்து கொண்டு இருந்தான் பரிதி. அப்பொழுது தான் அதை கவனித்தான். "யார் அது? கார்டன்ல எதுக்கு படுத்திருக்காங்க?" என்று சிந்தித்து கொண்டே அவள் அருகில் வந்து நின்றான்.
அவள் முகத்தில் இருந்து போர்வை விளகி இருந்தது. அவளை பார்த்தவன் அதிர்ந்து போனான்.
"இவ எதுக்கு இங்க படுத்திருக்கா? அட கடவுளே! நான் வெளியே இருக்க ரூம்ல தான இவள படுக்க சொன்னேன். இப்படி இங்க வந்து படுத்திருக்கா" என்று எண்ணி தலையில் அடித்து கொண்டான்.
அப்பொழுது தான் அவள் குளிரில் உளறிக் கொண்டு இருப்பது அவன் காதில் விழுந்தது. அவன் அவளிடம் சென்று அவளை எழுப்ப நினைத்தான். ஆனால் அவள் விழி திறக்கவே இல்லை. வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் வேகமாக அவளை அவன் கரத்தால் தூக்கி கொண்டு விரைவாக உள்ளே அவன் அறைக்கு சென்றான்.
அவன் அறையில் ஹீட்டரை போட்டு விட்டு அவளை மெத்தையில் படுக்க வைத்தான். அவளை தூக்கிக்கொண்டு வந்த பொழுதே அவளுக்கு காய்ச்சலாக இருப்பதை அவன் உணர்ந்தான். என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
பின் அவர்கள் குடும்ப மருத்துவரை அழைத்து இளமதிக்கு காய்ச்சல் இருப்பதாக சொல்லி, அவரை அவன் இல்லத்திற்கு வர சொன்னான். அவரும் ஒப்புக் கொண்டு வர சம்மதித்தார்.
அவள் முகத்தை பார்த்தவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவர் அங்கு வந்து சேர்ந்தார்.
"குளிர் காய்ச்சல். ரொம்ப சிரமப்பட்டு உடலை வருத்தி நிறைய வேலைகள் செஞ்சிருக்காங்க போல, அது மட்டும் இல்லாம பனியும் அதிகமா இருக்கு அதான் இப்படி குளிர் காய்ச்சல் வந்திருக்கு. அவுங்களுக்கு சாப்பிட எதாவது கொடுத்துட்டு அப்புறம் இந்த மாத்திரையை கொடுங்க" என்று கூறி சில மாத்திரைகளை கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.
VOUS LISEZ
என் வாழ்வின் சுடரொளியே!
Roman d'amourஅழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து த...