உறவினர்கள் நண்பர்கள் சூழ, வெகு விமரிசையாக நடைபெற்றது ரகுபதி ராதாவின் திருமணம்.
இதெல்லாம் இவ்வளவு விரைவில் இவ்வளவு எளிதாக நடக்கும் என்று இளமதி நினைத்து பார்க்கவே இல்லை.
பரிதி ஒருவனே ராதாவின் பெற்றோரிடம் பேசி அவர்களை அந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தான்.
அதே சமயம், ராசாத்தியை தந்திரமாக ஏமாற்றி அவன் ராதாவை பற்றி சொல்லி இருந்த அனைத்தையும் உண்மை போல் காட்டி இருந்தான்.
ராசாத்தி ராதாவின் குடும்பம் தங்கி இருந்த வீட்டை பார்த்ததுமே அவள் தான் மருமகள் என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.
அவள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு அவளுக்கு அடிமை வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் அனைவரையும் வேலையை விட்டு பரிதி நிறுத்தியதால், அவளுக்கு ராதா குடும்பத்தை பற்றி விசாரிக்க வழி இல்லாமல் போனது.
இருப்பினும் எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் வந்து விட கூடாது என்பதற்காக அவளுக்கு தெரிந்தவர்கள் சிலரை ராதா குடும்பத்தை பற்றி விசாரிக்க செய்திருந்தாள்.
அவர்கள் அனைவரும் தவறாக எதுவும் சொல்லாமல் இருக்க, அவளும் முழு மனதுடன் ராதாவை மருமகளாக ஏற்றுக் கொள்ள சம்மதித்தாள்.
அனைவரும் சம்மதித்து அனைவரின் ஆசிர்வாதத்துடன் ராதா ரகுபதியின் திருமணம் நல்ல முறையில் நடந்தது.
இளமதி மனம் மகிழ்ந்து இருந்தாள். பரிதி நல்ல காரியம் செய்திருக்கிறான் என்று தோன்றியது.
திருமணம் முடிந்ததும் இயமதியும் பரிதியும் கிளம்பி அவர்கள் இல்லத்திற்கு வந்திருந்தார்கள்.
"ரொம்ப தேங்க்ஸ் பதி! நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாரையும் சமாளிச்சு இந்த கல்யாணம் நடக்க உதவி இருக்கீங்க" என்றாள் மனதார.
"நீ தேங்க்ஸ் எல்லாம் சொல்லுவேனு தெரிஞ்சு இருந்தா நான் இதை செஞ்சிருக்கவே மாட்டேன்" என்றான் முகத்தை சோகமாக வைத்து கொண்டு.
DU LIEST GERADE
என் வாழ்வின் சுடரொளியே!
Romantikஅழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து த...