சுடர் - 43

1.6K 69 16
                                    

இடைவிடாது கேட்டு கொண்டிருந்த குருவிகளின் சத்தம் அவள் உறக்கத்தை கலைத்தது. மெதுவாக கண்களை திறந்தாள், சூரிய ஒளி அப்பொழுது தான் மெதுவாக பரவ தொடங்கியிருந்தது.

இளமதி எழுந்து கட்டிலில் அமர்ந்தாள். நேற்று இரவு நடந்தவை அவள் நினைவுக்கு வந்தது, அவள் விரைவாக குளித்து விட்டு லட்சுமியை பார்க்க சென்றாள்.

"அம்மா, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எதுவும் ஸ்பெஷல்லா எல்லாம் செய்ய வேண்டாம் மா. பாயசம் கூட செய்ய வேண்டாம். அக்கா ரொம்ப கவலையா இருக்கும் போது நாம இப்படி என் பிறந்தநாளை கொண்டாடுறது சரியா இருக்காது" என்ற லட்சுமியின் வார்த்தைகள் அவள் காதில் விழுந்தது.

"ஆமா மா, நானும் அத சொல்லணும்னு தான் நினைச்சேன். இளமதி சந்தோசமா இருந்தா தான் நம்ம வீடும் சந்தோசமா இருக்கும். நீ அப்பா கூட கோவிலுக்கு மட்டும் போயிட்டு வந்துரு!" என்றார் அன்பாக மாதவி.

இளமதி மனம் நெகிழ்ந்தது. தன்னுடைய சந்தோஷத்திற்காக அவர்கள் சந்தோஷத்தை இழக்க நினைக்கும் மனிதர்கள் அவளுக்காக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது.

லட்சுமி கோவிலுக்கு சென்றவுடன், இளமதி மகேஸ்வரியின் உதவியுடன் லட்சுமிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்க ஏற்பாடுகள் செய்தாள், மாதவிக்கு அது தெரிந்து விடாமல் பார்த்துக் கொண்டாள்.

"மாமா அங்க வந்திருக்காரா?" நந்திதா பரிதியின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்க, "இல்ல மேடம் அவர் இங்க வரவே இல்லை" என்றாள்.

நந்திதாவுக்கு குழப்பம் அதிகரித்தது. "அங்க வராம அவர் எங்கே தான் போனாரு?" என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள்.

"ஒருவேளை, அந்த இளமதிய பார்க்க போயிட்டாரா? இல்லை அதுக்கு வாய்ப்பே இல்லை. அவர் அங்க போயிருந்தா நிச்சயமா எனக்கு தகவல் வந்திருக்கும். அவர் அங்க போகல வேறு எங்கேயோ தான் போயிருக்காரு!" என்று எண்ணி கொண்டு இருந்த சமயம் அவள் தந்தை அந்த அறைக்குள் நுழைந்தார்.

என் வாழ்வின் சுடரொளியே!Où les histoires vivent. Découvrez maintenant