சுடர் - 13

1.8K 74 5
                                    

மாலை பூஜை அறையை சுத்தம் செய்து கொண்டு இருந்த இளமதியின் மனதில் திடீரென இப்படி தோன்றியது, "நீ மனைவியா இருக்க தகுதி இல்லாதவ இங்க வேலைக்காரியா தான் இருக்கனும்னு சொன்னவர் நான் படிக்க காலேஜ் போகணும்னு சொன்னா அதுக்கு சம்மதிப்பாரா?" இந்த எண்ணம் அவள் மனதை வாட்டியது.

"திருமண ஏற்பாடுகள் செய்யும் போதே இதை எல்லாம் பேசி தானே முடிவு செய்தார்கள். அதெப்படி அவனால் ஒப்புக் கொள்ளாமல் போக முடியும்? அப்படி எல்லாம் போக வேண்டாம் என்று சொல்ல முடியாது" என்று எண்ணி அவளை அவளே சமாதானம் செய்து கொண்டாள், இருப்பினும் அவளுள் சற்று நெருடலாகவே இருந்தது.

இரவு உணவு சமைத்து வைத்து விட்டு, அவள் அவனுக்காக காத்திருந்தாள். அவன் ஒன்பது மணியளவில் வந்து சேர்ந்தான்.

அவன் நேராக அவன் அறைக்கு சென்று குளித்து, உடை மாற்றி விட்டு ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தான்.

சிறிது நேரம் கழித்து இளமதி அவன் அறைக்கு சென்றாள். அவள் மெதுவாக கதவைத் தட்ட, உள்ளிருந்து பதில் எதுவும் வரவில்லை. அவள் மீண்டும் கதவை தட்டினாள். "உள்ள வா!" அவன் குரலில் தெரிந்த எரிச்சல் அவள் மனதில் சிறு பதட்டத்தை ஏற்படுத்தியது.

அவள் உள்ளே நுழைந்தாள், "என்ன?" அவன் கேட்க, "திங்கட்கிழமையில் இருந்து நான் காலேஜ் போகனும். வீட்டில் இருந்து போகட்டுமா? இல்ல விடுதியிலேயே தங்கிக்கவா?" அவள் சுற்றிவளைக்காமல் நேரடியாக விஷயத்தை கூறினாள்.

அவன் ஏதோ யோசனையில் இருப்பது போல் தெரிந்தது. சற்று நேரம் கழித்து நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான்.

"இப்போ நீ காலேஜ் போய் என்ன செய்ய போற? அதான் உன் லைஃப் செட்டில் ஆயிடுச்சே! இனியும் எதுக்கு காலேஜ்?" அவன் அலட்சியமாக அவள் முகத்தை பார்த்து கேட்டான்.

இளமதிக்கு கோபம் வந்தது, "படிப்பு தான் என்னுடைய அடையாளம்! யாரை நம்பியும் நான் இல்லை. எனக்கு என்னுடைய படிப்பு தான் முக்கியம், அதை யாராலும் தடுக்க முடியாது.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now