சுடர் - 23

1.8K 69 6
                                    

மாலை மங்கி கொண்டிருந்த வேளை, அந்த இடம் மேலும் ரம்மியமாக காட்சியளித்தது. அந்த சூரிய அஸ்தமனத்தின் போது வானம் அழகிய இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க, அங்கிருந்த பல வகையான பூக்கள் அந்த இடத்தில் அவற்றின் நறுமணத்தை பரப்பி கொண்டு இருந்தது.

அவற்றின் தேனை சுவைக்க பல பட்டாம்பூச்சிகள் அங்கே வட்டமடித்து சுத்திக் கொண்டு இருக்க, மூடுபனி செடிகளின் இலைகளை மூடிக் கொண்டு இருந்தன.

அவள் முகத்தை மெல்ல வருடி சென்ற தென்றல், அவள் மனதையும் குளிர்வித்தது.

"இந்த இடம் பிடிச்சிருக்கா?" அவள் செவிகளுக்கு வெகு அருகில் அவனின் குரல் கேட்டு அவனை திரும்பி பார்த்தாள் இளமதி. "ரொம்ப பிடிச்சிருக்கு!" என்றாள் மனதார.

"இது தான் என் அம்மாவுடைய ஃபேவரைட் ஸ்பாட். எப்பவும் இங்க தான் இருப்பார்களாம். படிக்கும் போது கூட. நானும் ஒவ்வொரு வருடமும் இந்த இடத்துக்கு வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருப்பேன். ஏனோ இதை எல்லாம் ஒரு நாளும் ரசித்தது இல்லை" என்றான்.

"கல் நெஞ்சம் என்று சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் உங்களை பார்த்து தான் அது எப்படி இருக்கும் என்று உணர்ந்திருக்கிறேன்" என்றாள் மனதில் எண்ணியதை மறைக்காமல். இவ்வளவு அழகான இடத்தை எந்த மடையனால் ரசிக்காமல் இருக்க முடியும்? அவளுக்கு அவனை பார்க்க விசித்திரமாக இருந்தது.

அவன் புன்னகைத்தான். "இன்னிக்கு தான் ரசிக்கும் எண்ணமே வருது. அந்த இயற்கையை நீ ரசிப்பதை பார்த்து கொண்டே இருக்கலாம்" என்றான் கண் அடித்து. அவள் அதிர்ச்சியாக அவனை பார்த்தாள். "இவனுக்கு என்ன ஆச்சு? ரெண்டு நாளா இவன் நடவடிக்கை எதுவும் சரியில்லையே?" மனதில் எண்ணி கொண்டு அவனை பார்க்காமல் வேறு புறமாக திரும்பி கொண்டாள்.

"பாட்டி தாத்தா எங்கே?" அவள் கேட்க, "வீட்டுக்கு போயிட்டாங்க. இனி இங்க குளிர் அதிகமா இருக்கும் அதான் அவுங்க கிளம்பிட்டாங்க" என்றான்.

"ஓ! சரி அப்போ நாமும் கிளம்புவோமா?" என்றாள்.

"இல்ல நாம இன்னிக்கு வீட்டுக்கு போகல, இங்கே தான் தங்க போறோம்" என்றான் அவன் சாதாரணமாக.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now