சுடர் - 35

1.6K 83 5
                                    

"மதி! ரிசல்ட் வந்துருச்சு டீ! நீ தான் நம்ம க்ளாஸ்ல ஃபர்ஸ்ட், யுனிவர்சிட்டி ரேன்க் வாங்கிருக்க" என்றாள் உற்சாகமாக.

மதி புன்னகையுடன், "நல்லது!" என்றாள். "என்ன டீ! எவ்வளவு பெரிய நல்ல விஷயம் சொல்லிருக்கேன். நீ இவ்வளவு சாதாரணமா இருக்க" என்றாள் ஆச்சரியமாக.

"எக்ஸாம் எழுதும் போதே எனக்கு நம்பிக்கை இருந்தது ராதா. அதான்!" என்று அவள் கூற ராதா அவளை பாராட்டி பேசிக் கொண்டு இருந்தாள்.

"சரி! உன் மாமியார் என்ன சொல்றாங்க? நல்ல படியா பாத்துக்கிறாங்களா?" இளமதி ஆர்வமாக வினவ, "அதெல்லாம் ரொம்ப நல்லாவே கவனிக்குறாங்க. என்கிட்ட எந்த வேலையும் சொல்லுறது இல்ல, சாப்பாடு கூட அவுங்களே கொண்டு வந்து தராங்க" என்று மகிழ்ச்சியாக அவள் பதில் அளித்ததும், இளமதியின் மனமும் மகிழ்ந்தது.

"அதெல்லாம் இருக்கட்டும், நீ அடுத்து என்ன செய்ய போற?  கலெக்டர் ஆகணும்ன்னு தானே உனக்கு விருப்பம்? அடுத்த முயற்சி அதுக்கு தானே?" ராதா கேட்க,

"அது பற்றி இன்னும் எதுவும் முடிவு பண்ணல ராதா. கலெக்டர் ஆகணும்ன்னு எனக்கு ஆசை தான் ‌ஆனா அதுக்கு முன்னாடி ஊர்ல இருக்க நிலத்தில கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டி இருக்கு. அதெல்லாம் செஞ்சு முடிச்சு, பயிர்களை கவனிக்க ஆள்களை போட்டுட்டு தான் என்னுடைய அடுத்த வேலைய பாக்க முடியும்" இளமதி பதில் அளித்தாள்.

"அதுவும் சரி தான், இதுக்காக தானே இந்த படிப்ப தேர்ந்தெடுத்து படிச்ச! நானும் உனக்கு தேவையான உதவிகளை செய்யுறேன். எனக்கும் இங்க எந்த வேலையும் செய்யாம இருக்கிறது போர் அடிக்குது" என்றாள். இளமதியும் சிரித்து கொண்டே அதை ஏற்றுக் கொண்டாள்.

இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு கைபேசியை வைத்தார்கள்.

அதன் பின்னர் இளமதி அவள் வேலைகளை கவனிக்க தொடங்கினாள். அவள் மனதில் அவன் அவள் மேலே படிக்க சம்மதிப்பானா, வெளியூரில் சென்று தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவும் வாய்ப்புண்டு, அதை எல்லாம் அவன் ஒப்புக் கொள்வானா? என்று பல கேள்விகள் இருந்தது.

என் வாழ்வின் சுடரொளியே!Donde viven las historias. Descúbrelo ahora