விழிகளில் கோபத்துடன் திரும்பியவள் ஒரு நிமிடம் திகைத்து போய் நின்றாள், கண்களில் இருந்து கோபம் மறைந்து ஆனந்த கண்ணீர் மெல்ல திரையிட்டது.
"பதி! நீங்க? இங்க!" அவள் வார்த்தைகள் தடுமாறின. "நான் தான் நானே தான்!" என்று கூறி அவளை அணைத்துக் கொண்டான்.
இளமதி அது கனவா நினைவா என்று தெரியாமல் நின்றிருந்தாள். மூன்று நாட்கள் தான் அவனை பார்க்காமல் இருந்தாள் ஆனால் அதுவே ஒரு யுகம் போல் இருந்தது, மீண்டும் அவனை எப்பொழுதும் பார்ப்போம் என்று அவள் மனம் ஏங்க தொடங்கி இருந்தது.
"உன்ன பார்க்காம என்னால அங்க இருக்கவே முடியல மதி! அதான் எல்லா வேலையும் சீக்கிரம் முடிச்சுட்டு இன்னிக்கே இங்க கிளம்பி வந்துட்டேன். ஆனா உன்ன பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே. நீ என்ன மிஸ் பண்ணவே இல்லையா?" என்றான் சோகமாக.
"நானும் தான் உங்கள மிஸ் பண்ணேன். நாளைக்கே வீட்டுக்கு கிளம்பிடலாம்னு தான் இருந்தேன். ஆனா நீங்க திடீர்னு இங்க வந்ததும் எனக்கு இது கனவா நிஜமானு இருக்கு" என்றாள் அவள் எண்ணங்களை மறைக்காமல்.
"கனவெல்லாம் இல்ல நிஜம் தான். நான் கஷ்டப் பட்டு இந்த அட்ரஸ் கண்டுபிடிச்சு ஒருமணி நேரத்திற்கு முன்னதான் வந்தேன்" என்று கூறி அவள் கூந்தலை தடவிக் கொடுத்தான்.
அப்பொழுது தான் அவளுக்கு மற்றவை நினைவுக்கு வந்தது. "அய்யோ! இந்த அட்ரஸ் கண்டுபிடிச்சானா? அப்போ என் அம்மா அப்பா யாருன்னு இந்நேரம் இவருக்கு தெரிஞ்சிருக்குமே! கடவுளே!!" என்று எண்ணி கொண்டு அவன் முகத்தை பார்த்தாள்.
"அதான் நான் வந்துட்டேனே அப்புறமும் ஏன் முகத்தை இப்படி சோகமா வச்சிருக்க? கொஞ்சம் சிரிக்கலாமே!" என்றான் கெஞ்சலாக. அவள் புன்னகைத்தாள் ஆனால் அவள் மனதில் பல குழப்பங்கள் நிறைந்திருந்தன.
"சரி சாப்பிட்டீங்களா?" என்றாள் பாசமாக, "இல்ல மதி! உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்" என்றான். அவள் அவனை கீழே அழைத்து சென்றாள்.
VOCÊ ESTÁ LENDO
என் வாழ்வின் சுடரொளியே!
Romanceஅழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து த...