அடுத்தடுத்து வந்த நாட்களில் அவன் கேட்ட அனைத்து உடைகளுக்கும் அவன் எதிர்பார்த்ததை விட மிகவும் சிறப்பாக வடிவமைத்து கொடுத்திருந்தாள்.
அவளின் திறமை அவனை பிரம்மிக்க செய்தது. அந்த வடிவத்தில் உருவாக்க பட்ட ஆடைகள் அனைத்தும் அவன் எண்ணியதை விட அதிக லாபத்தை அவனுக்கு ஈட்டி தந்தது.
அவன் எல்லையற்ற ஆனந்தத்தில் திளைத்து இருந்தான். அந்த ஆனந்தத்தில் அவள் மீது இருந்த கோபங்கள் எல்லாம் மறந்து போனது அவனுக்கு.
அன்று விரைவாகவே அவன் இல்லம் திரும்பி இருந்தான். அவன் உள்ளே நுழைந்த சமயம் இளமதி சோஃபாவில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தாள்.
அவள் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் "இயற்கை வேளாண்மை" என்று எழுதி இருந்தது.
"இவளுக்கு சலிப்பா இல்லையா கல்லூரியில் படித்த பாடத்தை பற்றியே ஓய்வு நேரத்திலும் படித்துக் கொண்டு இருக்க?" என்று சிந்தித்து கொண்டே அவள் அருகில் சென்றான்.
"இளமதி!" அவள் புத்தகத்தில் ஆழ்ந்திருந்ததால் அவனின் குரல் அவள் செவிகளை எட்டவில்லை. அவன் மீண்டும் ஒருமுறை அவள் பெயரை உரக்க உச்சரிக்க அவள் சட்டென்று தலை நிமிர்த்தி அவன் முகத்தை பார்த்தாள்.
அவள் முன் முகம் முழுவதும் புன்னகையுடன் பரிதி நின்றிருந்தான். "இவனுக்கு சிரிக்கவெல்லாம் தெரியுமா?" அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவள் கையில் இருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்.
"இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதுக்கு காரணம் நீ தான்" என்றான் மகிழ்ச்சி குரலிலும் வெளிப்பட.
"ஏன்?" அவள் ஆச்சரியமாக வினவினாள்.
"நீ வடிவமைத்து கொடுத்த எல்லா டிசைனும் அவ்வளவு அழகு. அது நான் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை எனக்கு ஈட்டி தந்தது. இதில் முக்கிய பங்கு உன்னுடையது தான். இந்தா இந்த பணத்தை வச்சுக்கோ" என்று கூறி அவளிடம் காசோலையை நீட்டினான் அவன்.
VOUS LISEZ
என் வாழ்வின் சுடரொளியே!
Roman d'amourஅழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து த...