சுடர் - 6

1.9K 71 1
                                    

கதிரவன் மெல்ல அஸ்தமித்து கொண்டு இருந்த அந்தி பொழுதில் அடர் மஞ்சள் நிறமாக இருந்த வானத்தை ரசித்து பார்த்து கொண்டு இருந்தாள் இளமதி. அந்த தூய்மையான காற்றை சுவாசிக்க இனிமையாக இருந்தது.

"என்ன பண்ணிட்டு இருக்கீங்க மேடம்?" ராதா அவளுக்கு அருகில் வந்து நின்றபடி கேட்டாள். "ஒன்னும் இல்ல ராதா, நாளைக்கு காலேஜ் போன அப்புறம் அம்மா அப்பா இந்த ஊர் எல்லாத்தையும் மிஸ் பண்ணுவேன். அதான் யோசிச்சுட்டு இருந்தேன்" அவள் ராதாவின் முகம் பார்த்து சோர்வாக கூறினாள்.

"நீ ஒன்னும் கவலை படாதே, உனக்கு எப்போ இங்க வரனும்னு தோனுதோ அப்பா எங்கிட்ட சொல்லு, நான் உன்ன கூட்டிட்டு வரேன்" அவள் இளமதியின் கரம் பற்றி கூற, அவள் மகிழ்ச்சியாக தலை அசைத்தாள்.

இருவரும் அன்று இரவு ராதாவின் இல்லத்தை விட்டு கிளம்பினர். வழக்கம் போல் அவர்களின் கல்லூரி நாட்கள் தொடங்கின.

"அப்பா, உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் பா" ரகுபதி சிறு பதட்டத்துடன் கூற, "என்ன பா?" மணிவாசகம் குழப்பமாக வினவினார்.

"அப்பா, அம்மா இளமதிக்கு பொருத்தம் இல்லாத ஒருத்தன கல்யாணம் பண்ணி வைக்க போறாங்கலாம். நான் ரம்யா கிட்ட பேசும் போது அவ உளறிட்டா. எனக்கு என்னவோ அம்மா ஏதோ பெரிய திட்டம் போடுற மாதிரி தெரியுது பா" அவன் கூறியதை கேட்டு மணிவாசகம் அதிர்ந்து போனார்.

"இவ அந்த பொண்ண நிம்மதியா வாழவே விடமாட்டா போல இருக்கே? இப்போ என்ன செய்யுறது?" அவர் சோர்வாக கேட்க, "எப்படியாவது இளமதிய இதுல இருந்து காப்பாத்தனும் பா. அவ வாழ்க்கைய அம்மா அழிக்க நினைக்குறாங்க அது மட்டும் நடக்கவே கூடாது" அவன் உறுதியாக பதில் அளித்தான்.

"ஆமா பா. கல்யாணம் பண்ணி வச்ச அப்புறம் சொத்தை எல்லாம் இவ அபகரிச்சிடலாம்னு பாக்குறா, ஆனா என் மாமா புத்திசாலி, சீக்கிரம் இறந்திடுவோம்னு அவருக்கு ரொம்ப நாள் முன்னாடியே தெரிஞ்சிருக்கு போல, அதான் சொத்து எல்லாம் யாருக்கு எப்போ சேரணும்னு தெளிவா உயில் எழுதி வச்சுட்டு போயிட்டாரு.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now