சுடர் - 7

1.9K 67 6
                                    

"மாமா!" ரகுபதியை பார்த்ததும் அவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. "என்ன மாமா! சொல்லாம கொள்ளாம இப்படி திடீர்னு வந்திருக்கீங்க?" அவள் புன்னகையுடன் கேட்க, "உன்ன பாக்க தான் மா" அவன் குரலில் தெரிந்த தயக்கம் அவளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

"சரி வாங்க மாமா" என்று அவனை அழைத்து சென்று வரவேற்பு அறையில் அமர வைத்தாள்.

"மாமா நல்லா இருக்காங்காரா?" அவள் கேட்க, "நல்லா இருக்காரு மா. உங்கிட்ட அவர் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லி தான் என்ன இங்க அனுப்பி வச்சாரு" அவன் கூற, அது அவள் குழப்பத்தை மேலும் அதிகரித்தது.

"சரி மாமா போன் பண்ணி கொடுங்க" என்று கூறி அவன் அருகில் அமர்ந்தாள்.

"மாமா, நல்லா இருக்கீங்களா?" அவள் கேட்க, "நல்லா இருக்கேன் மா. நீ எப்படி இருக்க?" அவர் பாசமாக வினவினார். "நல்லா இருக்கேன் மாமா" அவள் புன்னகைத்தாள்.

"உன்கிட்ட ஒன்னு சொல்லனும் மா" அவர் தயங்க, "சொல்லுங்க மாமா" அவள் பொறுமையாக கேட்டாள்.

"இளமதி, மாமா உன் விஷயத்தில எதாவது ஒரு முடிவு எடுத்தா, அது சரியா இருக்கும்னு நீ நம்புறயா?" அவர் வினவ, "இதென்ன கேள்வி மாமா, நீங்க என்ன முடிவு எடுத்தாலும் அது என்னுடைய நல்லதுக்கு தான் இருக்கும். அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல" அவள் கூறியதை கேட்டு அவர் மனம் சற்று அமைதி அடைந்தது.

"உன் அத்தை உன்ன படிக்க அனுமதி தர மாதிரி நடிச்சு இப்போ உன் வாழ்க்கைய கெடுக்க ஒரு பெரிய திட்டம் போட்டுட்டு இருக்கா மா" அவர் கூறியதைக் கேட்டு அவள் அதிர்ச்சியாக நின்றாள்.

"என்ன சொல்றீங்க மாமா? அப்படி என்ன செய்ய போறாங்க?" அவள் சோகமாக கேட்க, "நம்ம தோட்டத்தில வேலை செய்யுற ஒருத்தன உனக்கு கல்யாணம் செஞ்சு வைக்க திட்டம் போடுறா மா" என்று கூறி ராசாத்தி தீட்டிய திட்டத்தை பற்றி அவளிடம் அவர் கூறியதை கேட்டு அவள் கண்கள் கலங்கின.

"மாமா, உங்களுக்கு நான் மகளா இல்லாம போனாலும், இவ்வளவு நாள் என்ன வளர்த்த உங்க ரெண்டு பேரையும் என்னுடைய பெத்தவங்க இடத்துல தான் வச்சு பாத்தேன். ஆனா அத்தைக்கு ஏன் என்மேல இவ்வளவு வெறுப்பு மாமா?

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now