சுடர் - 29

1.7K 66 6
                                    

"முத்தம்மா பாட்டி! முடிஞ்சா என்ன பிடிங்க பார்ப்போம்!" என்று கூறி அவர் கையில் பிடிபடாமல் அங்கும் இங்கும் இளமதி ஓடிக் கொண்டிருக்க, "அம்மாடி! பாட்டி பாவம் மா, வயசான காலத்துல ஏன் மா இப்படி ஓட வைக்குற? கொஞ்சம் இந்த எண்ணெயை வச்சுக்கோ" என்று கெஞ்சி கொண்டே அவள் பின்னால் சென்று கொண்டிருந்தார் முத்தம்மா.

"மதி கண்ணு பாத்து டா, எங்கேயும் மோதி விழுந்துறாதே!" என்று பாசமாக கூறி அவளின் செயல்களை பார்த்து மலர்ந்த முகத்துடன் அதை ரசித்து கொண்டிருந்தார் மகேஷ்வரி.

இதையெல்லாம் பார்த்து கொண்டு அந்த அழகிய தருணத்தை கலைக்க மனம் வராமல் வாசலிலேயே நின்றிருந்தான் பரிதி.

அவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்றுவரை அப்படி ஒரு புன்னகையை அவன் மகேஷ்வரி முகத்தில் கண்டதே இல்லை. "இவளால் மட்டும் தான் இவ்வாறு அவளை சுற்றி இருக்கும் அனைவரையும் கவலை மறந்து மனம் விட்டு சிரிக்க வைக்க முடியும்" என்று எண்ணி கொண்டே அவன் உள்ளே நுழைய, இளமதி ஓடி வந்தவள் அவனை கவனிக்கவில்லை.

"மதி பாத்திரம் மா!" என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவள் வந்த அவன் மேல் மோதி விட்டாள். அவனும் அவள் கீழே விழுந்து விடாமல் கவனமாக அவளை பற்றி கொண்டான்.

இருவர் விழிகளும் சந்தித்துக் கொள்ள, அவன் மனதில் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க தொடங்கின.

ஆனால் இளமதிக்கோ அவன் மீது கடும் கோபம். சில நிமிடங்களிலேயே அவன் பிடியிலிருந்து விலகி நின்று கொண்டாள்.

அவன் அவள் முகத்தை பார்த்து அவள் கோபமாக இருப்பதை உணர்ந்து கொண்டான். அவள் கோபம் கொள்ளாமல் இருந்திருந்தால் தான் ஆச்சர்யம் என்று எண்ணி விட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

அவனை பார்த்த மகேஸ்வரியின் கண்கள் பளிச்சிட்டன. ஆனால் அடுத்த நொடியே அது மறைந்து போனது. சென்ற முறை அவளால் தான் அவர்கள் இருவரும் சண்டை போட்டு கொண்டார்கள், இந்த முறையும் அவ்வாறு நடந்து விட கூடாது என்று மனதில் வேண்டிக் கொண்டே அங்கிருந்து செல்ல நினைத்து அவர் இருக்கையில் இருந்து எழுந்தார்.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now