சுடர் - 2

2.5K 72 3
                                    

சில வருடங்களுக்கு பிறகு,

"இளமதி!" கோபமான அவள் அத்தையின் குரல் கேட்டு அவள் உள்ளம் பதறியது. "எதுக்கு கோபமா கூப்பிடுறாங்க தெரியலயே? கடவுளே!" என்று மனதில் எண்ணிக் கொண்டு வெளியே வந்தாள்.

"மகாராணி ஆடி அசஞ்சு வந்து சேர ஒருமணி நேரம் ஆகுமா?" கோபமாக அவளை முறைத்து பார்த்தாள் ராசாத்தி.

"இல்ல அத்த, உள்ள வேலை செஞ்சுட்டு இருந்தேன்" அவள் பதில் அளித்தாள். "காரணம் மட்டும் சொல்லு, வேலை எதுவும் சரியா செய்யாத" அவள் குறை சொல்ல, "எந்த வேலை பத்தி சொல்லுறாங்க" இளமதி மனதில் எண்ணினாள்.

"தலைக்கு டை போட்டு விட சொன்னேன். நீ போட்டு விட்ட லட்சணத்தை கொஞ்சம் பாரு? அங்கங்கே வெள்ள முடி தெரியுது" என்று கூறி அவள் கண்ணாடியில் பார்க்க,

"அது போட்டு அரைமணி நேரம் கழிச்சு தான் குளித்து இருக்கனும் அத்த, ஆனா நீங்க அப்போவே குளிச்சிட்டீங்க அதான் சரியா பிடிக்கல" அவள் எதார்த்தமாக பதில் அளித்தாள்.

"பல்ல தட்டிடுவேன். என்னவே எதிர்த்து பேசுறியா நீ? ரெண்டு நிமிஷத்துல கலர் பிடிக்குற டை தான் எனக்கு வேணும். அடுத்த முறை அத வாங்கிட்டு வா. அத விட்டுட்டு இப்படி பதிலுக்கு பதில் பேசிட்டு இருக்காதே" ராசாத்தி அவள் முகத்தை பார்த்து கோபமாக கூற, அவள் தலை அசைத்தாள்.

"என்னது கேன்சரா? அட கடவுளே! சரி பா கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க" கைபேசியில் பேசியவாரு மணிவாசகம் அந்த இடத்துக்கு வந்தார்.

"யாருக்கு கேன்சர்?" ராசாத்தி அவர் முகத்தை பார்த்து வினவ, "நம்ம ராமுவோட அக்காவுக்காம் மா. பாவம், உன் வயசு தான் இருக்கும்" அவர் சோகமாக கூற, "எனக்கு ஒன்னு அவ்வளவு வயசு ஆகல. ராமுவுக்கு என்ன வயசோ அது தான் எனக்கும்" அவள் அலட்டிக்காமல் கூற, அவனுக்கு சிரிப்பு வந்தது. அதை மறைத்து கொண்டு அவளிடம் பேசினான்.

"மன்னிச்சிடு மா, நான் தான் மாத்தி சொல்லிட்டேன். அவன் அக்கா சும்மா இல்லாம கண்ட சாயத்தை எல்லாம் வாங்கி தலைக்கு போட்டிருக்கா, அதனால தான் கேன்சர் வந்துச்சுனு டாக்டர் சொன்னாராம்" அவன் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கூற,

என் வாழ்வின் சுடரொளியே!Tempat cerita menjadi hidup. Temukan sekarang